Monday, June 15, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஹாடி அவாங் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் விதிமுறை மீறுகிறார்-சஞ்சீவன் சாடல்!


கோலாலம்பூர் ஜூன் 15
பாஸ் தலைவர் ஹாடி அவாங் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் விதிமுறைகளை மீறி வருவதாக பெர்சாத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் சாடினார்.
ஹம்சா ஜைனுடின் மீண்டும் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவராக நியமனம் செய்யப்படுவார் என்ற ஹாடியின் அறிவிப்பு ஏற்றுக்கொள்ள முடியாது ஒன்று என்றார் அவர்.
இந்த விவகாரத்தில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் உள்ள உறுப்புக் கட்சிகளின் அனுமதி பெறப்பட வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கிளாந்தான் தானா மேராவில் நடந்த ஒரு கூட்டத்தில் தன் முன்பாக ஹாடி செய்துள்ள இந்த அறிவிப்பு கூட்டணியின் விதிமுறைகளை மீறி உள்ளதாக பெர்சாத்து கட்சியின் பெர்செக்குக்து பிரிவின் தலைவருமான அவர் சொன்னார்.
இந்த விவகாரத்தில் பாஸ் கட்சி சுயேட்சையாக எந்த ஒரு முடிவும் எடுக்கக் கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் பாஸ்,பெர்சாத்து, எம்ஐபிபி மற்றும் கெராக்கான் ஆகிய நான்கு கட்சிகள் இடம் பெற்றுள்ளது என்பதை ஹாடி நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
பாஸ் கட்சிக்கு வேண்டுமானால் ஹாடி ஒரு பெருந் தலைவராக இருக்கலாம்.ஆனால் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு அல்ல என அவர் குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி கூட்டணி என்ற வகையில், அதில் உள்ள அனைத்து பங்காளி கட்சிகளின் தலைவர்களின் ஆலோசனை பெறப்பட வேண்டும் என அவர் சொன்னார்.
ஹாடியின் தன்மூப்பான செயல் எதிர்க்கட்சி கூட்டணியை பலவீனமடைய செய்யும் என சஞ்சீவன் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular