
ஜொகூர் மாநில அரசாங்கம் பல சிறந்த வழிகளில் இந்திய சமூகத்திற்கு நிதி உதவிகளை வழங்கி வருவதாக மாநில மஇகா தலைவர் ராவீன் குமார் கூறினார்.
மாநிலத்தில் உள்ள அரசு சாரா அமைப்புகள், ஆலயங்கள் மற்றும் தமிழ் பள்ளிகளுக்கு பல வகையில் நிதி உதவிகளை மாநில அரசாங்கம் செய்து வருவதாக ஜொகூர் மாநில அரசாங்க ஆட்சி குழு உறுப்பினருமான அவர் சொன்னார்.
அதே வேளையில் சிறு குறுந் தொழில்களை செய்து வரும் தகுதி பெற்ற தொழில் முணைவோர்களுக்கு வட்டியில்லா கடன்களை மாநில அரசாங்கம் வழங்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே இங்கு குறைந்த மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட செம்போரோங் மற்றும் லாடாங் மாடோஸ் தோட்ட தமிழ் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தாமான் யுனிவர்சிட்டி மற்றும் தாமான் பூலாய் உத்தாமா தமிழ் பள்ளிகளுக்கு மாற்றம் செய்யப்படுவார்கள் என்றார் அவர்.
தற்போது செம்போரோங் தமிழ் பள்ளியில் 9 மாணவர்களும் மற்றும் லாடாங் மாடோஸ் தமிழ் பள்ளியில் பனிரெண்டு மாணவர்களும் பயின்று வருவதாக அவர் சுட்டிக்
காட்டினார்.
இதனிடையே கடந்த இரண்டு ஆண்டுகளில் இம்மாநிலத்தில்
உள்ள இந்து கோயில்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகளுக்கு ஜொகூர் மந்திரி பெசார் டத்தோ ஓன் அபிஸ் வெ20 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளதாக ஜொகூர் மசீச மகளிர் அணி தலைவி டத்தோ வோங் யூ போங் கூறினார்.
மேலும் ரோகாயா அறக்கட்டளையின் வழி வெ5.7 மில்லியன் ஏழை மட்டும் வசதி குறைந்த மக்களுக்கு ஒதுக்கீடு செய்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே கடந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்திய சமூகத்திற்கு மாநில அரசாங்கம் 40,000 உணவு கூடைகளை வழங்கியதாக முன்னாள் மசீச தலைவரும் மூன்று தவணை மாநில ஆட்சி குழு உறுப்பினருமான டான்ஸ்ரீ டாக்டர் சுவா சோய் லெக் கூறினார்.
மேலும் மந்திரி பெசார் பதவி வகித்தது முதல் மாநிலத்தில் 18 இந்து கோயில்களுக்கு அபிஸ் நிலங்களை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.


