Thursday, May 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மலேசிய தடகள சங்க தலைமைத்துவ முடிவுகளில் சட்டபூர்வத் தன்மை கேள்விக்குறியாக உள்ளது

மலேசிய தடகள தலைமைத்துவ முடிவுகளின் சட்டப்பூர்வ தன்மை கேள்வியை எழுப்புவதாக கூட்டரசு பிரதேச தடகள சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ. புலைந்திரன் கூறினார்.
மலேசிய தடகள சங்கத்தின் தலைவராக காரீம் இப்ராஹிம் மீண்டும் மீண்டும் பொறுப்பேற்பது தொடர்பான அரசியலமைப்பு திருத்தங்கள் அந்த அமைப்பின் தேர்தல்கள், நியமனங்கள் மற்றும் நிர்வாக முடிவுகள் ஆகியவற்றில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த முடிவினால் மலேசிய அத்லெடிக்ஸ் கூட்டமைப்பு எடுத்து முக்கிய முடிவுகள் இனிமேல் செல்லுபடி ஆகாது என்றார் அவர்.
கடந்த ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட தேர்தல்கள், நியமனங்கள் மற்றும் ஆட்சி முறை முடிவுகளை சட்டபூர்வத் தன்மை குறித்து, காரீம் இப்ராஹிம் மீண்டும் தலைவராக பொறுப்பேற்பது தொடர்பான அரசியலமைப்பு திருத்துங்கள் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளதாக அவர் சுட்டி காட்டினார்.
ஆகையால் இது இனி மேலும் ஒரு உள் நிர்வாக விவாதம் என்று கருத முடியாது என அவர் குறிப்பிட்டார்.
‘செயல்முறைகள் சட்டபூர்வமானவையாக இருந்தாலும், அவை எந்த ஒரு செல்வாக்கும் அப்பாற்பட்டவையாக கருத வேண்டும்’ என அவர் தெரிவித்தார்.
நீண்டகால நிச்சயமற்ற தன்மை அடிமட்ட திட்டங்கள், தடகள வீரர்களின் வளர்ச்சி பாதைகள் மற்றும் நீண்ட கால திட்டமிடல்களை பாதிக்கலாம் என அவர் எச்சரித்தார்.
நிர்வாக மட்டத்தில் சர்ச்சை நீடிக்கும் வேளையில், இளம் விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து பயிற்சியிலும் போட்டிகளிலும் ஈடுபட்டு வருகிறது என அவர் சுட்டிக் காட்டினார்.
நீண்டகால நிச்சயமற்ற தன்மை மலேசிய தடகளத்திற்கு உலக தடகள அமைப்பிலிருந்து(world Athletics) தடைகள் விதிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்தக் கூடம் என அவர் எச்சரித்தார்.
தேசிய சம்மேளனம்
(National Federation) தொடர்பான நிச்சயமற்ற சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், பயிற்சியாளர்களும் அமைப்பாளர்களும் அடித்தள மட்ட மேம்பாட்டு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டதால், கடந்த வார இறுதியில் நாடு முழுவதும் நடைபெற்ற நடைப்பந்தய போட்டிகளில் இளம் விளையாட்டு வீரர்கள் போட்டியிட்டனர்.
ஆகையால் இந்த சர்ச்சை குறித்து ஒரு சுயேட்சை விசாரணை நடத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
விளையாட்டுத்துறை நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படுத்தன்மையை முன்னோக்கி நகர்வதை உறுதி செய்வதே இப்போதைக்கு மிக அவசியம் என அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular