Thursday, May 28, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஹெய்னிகியன் மார்க்கெட்டிங் ஆதரவிலான AI பயிற்சி பரிசளிப்பு நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது!

ஹெய்னிகியன் மார்க்கெட்டிங் ஆதரவில் Tiger empower மற்றும் மலர் டெய்லி இணைந்து நடத்திய டிஜிட்டல் மற்றும் AI தொழில்நுட்ப சிறப்பு பயிற்சியின் பரிசளிப்பு விழா நேற்று முன் தினம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஹெய்னிகியன் மார்க்கெட்டிங் ஆதரவிலான இந்த பயிற்சி திட்டத்தை மலர் டெய்லி NAWEM அமைப்பின் ஒத்துழைப்பின் கீழ் வெற்றிகரமாக நடத்தியது.
சுமார் 10க்கும் மேற்கொள்ளப்பட்ட குறுஞ் சிறு வணிக தொழில் முனைவோர் கலந்து கொண்ட இந்த பயிற்சியை NAWEM அமைப்பின் அனுஷா வெகு சிறப்பாக வழி நடத்தினார்.
இந்திய சமூகத்தின் மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தப்படும் இந்த திட்டத்திற்கு முன்னோடியாக இருந்து வரும் ஹெய்னிகியன் மார்க்கெட்டிங் வர்த்தக பிரிவின் நிர்வாகி ஜெனிபர் தெனாட் சிறப்பு வருகை புரிந்தார்.
இந்த தொழில்நுட்ப சிறப்பு பயிற்சியில் கலந்து கொண்டவர்களின் வெற்றியாளர்களின் ஆற்றல் குறித்து அனுஷா சிறப்பு விளக்கத்தை தந்தார்.
இந்த சிறப்பு பயிற்சியில் கலந்து கொண்டதால் தங்கள் வர்த்தகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்து ஒவ்வொரு வெற்றியாளரும் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
தங்களின் தொழில் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த பயிற்சி ஒரு அற்புதமான வாய்ப்பாக தங்களுக்கு கிடைத்துள்ளதாக இந்த வெற்றியாளர்கள் தங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர்.
இந்த பயிற்சியின் வெற்றியாளரான Heavenly Bakers நிறுவன உரிமையாளர் சந்திரிகா நாயுடு தமது தொழில் அனுபவத்தை அற்புதமாக பகிர்ந்து கொண்டார்.
தேங்காய் பால் மூலம் அற்புத மற்றும் தரமான சுவை பானத்தை தாம் தயாரித்து வரும் Synthesis Leisure cafe நிறுவனத்தின் உரிமையாளர் ரோகினி சிவலிங்கம் தமது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
இந்த பயிற்சித் திட்டத்தில் பங்கு பெற்று மூன்றாம் நிலைக்கு வெற்றி பெற்ற நவீன தொழில்நுட்ப விவசாயியான ரவீந்திரன் தவிர்க்க முடியாத காரணத்துக்காக இந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள இயலவில்லை.
இந்த பயிற்சியில் வெற்றி பெற்ற முதல் நிலை வெற்றியாளர் சந்திரிகா நாயுடு விற்கு வெ500 ரொக்கம், குளிர்சாதன கைப்பெட்டி மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
முதல் நிலைக்கு தகுதி பெற்ற ரோகினி சிவலிங்கத்திற்கு வெ300 ரொக்கம், குளிர்சாதனை கைப்பெட்டி மற்றும் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இரண்டாம் நிலைக்கு வெற்றி பெற்றவருக்கு வெ200 ரொக்கம், குளிர்சாதன கைப்பெட்டி மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் இந்த பயிற்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் உறுதிச் சீட்டு(Voucher) வழங்கப்பட்டது.
பயிற்சியில் வெற்றி பெற்ற மற்றும் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகளையும், சான்றிதழ்களையும் முன்னாள் தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி மற்றும் ஜெனிபர் தெனாட் எடுத்து வழங்கினார்.
இதனிடையே வர்த்தகத் துறையில் வளர்ந்து வரும் தொழில் முனைவர்களுக்கு இது போன்ற AI பயிற்சி மிக அவசியம் என செனட்டர் சரஸ்வதி தமதுரையில் கூறினார்.
வளர்ந்து வரும் தொழில் முனைவர்கள் தங்களது தொழிலை மேலும் மேம்படுத்த இதுபோன்ற பயிற்சிகள் உதவும் என்றார் அவர்.
ஹெய்னிகியன் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் இந்த சமூக மேம்பாட்டு திட்டத்தை தாங்கள் மிகவும் பாராட்டுவதாக மலர் டெய்லி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டத்தோ எஸ்எம் பெரியசாமி கூறினார்.
மலர் டெய்லி நிறுவனம் ஹெய்னிகியின் நிறுவனத்துடன் கைகோர்த்து இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சிக்கு Fastech Security Malaysia நிறுவனத்தின் தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ அழகேசு, அந்நிறுவனத்தின் இயக்குனர் டத்தோ ஷாமிளா, டத்தோ மகேந்திரன், தொழிலதிபர் சிவா மற்றும் டத்தோ பஞ்ச மூர்த்தி சிறப்பு வருகை புரிந்தனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular