
உலகளாவிய எரிபொருள் நெருக்கடி, ஈரான் போர் காரணமாக உருவான பொருளாதார சவால்களை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி தனது பாதுகாப்பு வாகன அணிவகுப்பை 50 சதவீதம் குறைக்க உத்தரவிட்டுள்ளார். புளூ புக் பாதுகாப்பு நெறிமுறைகள் மாற்றமின்றி, தேவையற்ற வாகனங்கள் நீக்கப்பட்டுள்ளன. மின்சார வாகனங்களை அதிகப்படுத்தவும், புதிய வாகனங்கள் வாங்காமல் கையிருப்பு வாகனங்களையே பயன்படுத்தவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒரு நாட்டின் பிரதமருக்கான பாதுகாப்பு என்பது எப்போதும் பிரம்மாண்டமான வாகன அணிவகுப்புகளுடன்தான் அடையாளப்படுத்தப்படும். ஆனால், இப்போது அந்த பிம்பம் மாறத் தொடங்கியிருக்கிறது. உலகளாவிய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், “சிக்கனத்தை தம்மிலிருந்தே தொடங்குவோம்” என பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எடுத்துள்ள ஒரு அதிரடி முடிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் ஈரான் போர் காரணமாக நிலவும் பொருளாதார சூழலை எதிர்கொள்ள, தனது பாதுகாப்பு வாகன அணிவகுப்பை 50 சதவீதம் குறைக்க பிரதமர் உத்தரவிட்டுள்ளார். பிரதமருக்கான பாதுகாப்பு விதிமுறைகளான புளூ புக் (Blue Book) நெறிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், தேவையற்ற வாகனங்களை மட்டும் நீக்க சிறப்பு பாதுகாப்புப் படைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


