Wednesday, May 13, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

நடுத்தர வருவாய் பெறும் குடும்பங்களை நாட்டின் “ஏடிஎம்'(ATM) ஆக நடத்த வேண்டாம்!

நடுத்தர வருவாய் பெறும் குடும்பங்களை நாட்டின் ஏடிஎம்’ ஆக நடத்த வேண்டாம் என கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் லிப் எங் அரசாங்கத்திற்கு நினைவுறுத்தினார்.
முன்மொழியப்பட்ட
RON95 பெட்ரோல் மானிய சீர்திருத்தங்கள் குறித்து அரசாங்கம் விரிவான விளக்கத்தை தர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதே வேளையில் நடுத்தர வருமான பிரிவினர் நியாயமற்ற முறையில் பாதிக்க கூடாது என்றார் அவர்.
இந்த விவகாரத்தில் நடுத்தர வருமான பிரிவினரை(M40) அரசாங்கத்திற்கான நிதி இயந்திரம்(ATM) போல நடத்துவதை அரசாங்கம் தவிர்க்க வேண்டும் என அவர் எச்சரித்தார்.
உயர்ந்து வருமானம் பெரும் பிரிவினரிடமிருந்து எரிபொருள் மானியங்களை குறைக்க அல்லது திரும்ப பெற எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் பாதிக்கப்பட்ட கொடுங்கள் எவ்வாறு அடையாளம் காணப்படுகிறார்கள், அதே போல் அவர்களின் வருமானம் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் எவ்வாறு மதிப்பிடப்படுகின்றன என்பது குறித்து தெளிவான அளவுகோல்களுடன் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
மானியம் பெறுவதற்கான தகுதி தனிநபர் வருமானத்தின் அடிப்படையில அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில என்பது குறித்து அவர் கேள்வி எழுப்பினார்.
‘எழுப்பப்பட்ட பிரச்சனைகளில், பரிசீலனைகளில் குடியிருப்பு இருப்பிடம், குழந்தைகளின் எண்ணிக்கை, முதியோர் சார்ந்திருப்பவர்கள், வீடு மற்றும் வாகன கடன்கள் அத்துடன் வேலைக்கான பயணம் தூரம் ஆகியவை அடங்குமா என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விகளுக்கு தெளிவான பதில் அளிக்க முடியாவிட்டால், இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை என்று தான் அர்த்தம் என அவர் சுட்டிக் காட்டினார்.
தற்போது T20 குடும்பங்கள் பெற்று வரும் RON95 பெட்ரோல் மானியங்களை சீரமைப்பதற்கான முன் முடிவுகளை அரசாங்கம் பரிசீலித்து வருவதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியான ஊடக அறிவகைகள் கூறின.
இது குறித்து தேசிய பொருளாதார நடவடிக்கை கவுன்சிலின்(MTEN) கீழுள்ள நெருக்கடி மேலாண்மை பணி குழுவால் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
உண்மையான வீட்டுச் செலவுகள் மற்றும் நிதி நெருக்கடியை கருத்தில் கொள்ளாமல், கொள்கை முடிவுகள் வெறும் வருமான வரம்புகளை மட்டுமே மையமாக கொண்டிருக்கக் கூடாது என லிம் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular