
இது ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் Tiger Empower மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கும் ஒரு சமூக மேம்பாட்டு முயற்சியாகும்.
இந்த ஒத்துழைப்பின் கீழ் இந்திய சிறு குறுந் தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் பற்றி ஒரு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளன.
இந்த இலவச பயிற்சியில் பங்கு பெற 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தொழில் வளர்ச்சிக்கு செயற்கை நுண்ணறிவு மிகவும் அவசியம் என்பதால் இந்த பயிற்சியில் தாம் பங்கு பெற ஆர்வம் கொண்டுள்ளதாக செராஸில் Beisik Bakeshop பேக்கரியை நடத்தி வரும் பிரவீனா அசோகன் கூறுகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக தமது வீட்டில் இந்த பேக்கரியை தாம் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இது மட்டுமின்றி தாம் யோகா பயிற்சிகளை நடத்தி வருவதாக அவர் சொன்னார்.
கடந்த 10 ஆண்டுகளாக இந்த யோகா பயிற்சி வகுப்புகளை தாம் நடத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இனிப்பு குறைவான கேக்குகள் மற்றும் குக்கீஸ் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த பேக்கரியை தாம் தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.
சமூக வலைத்தளம் மூலம் இந்த வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த தொழிலை அடுத்த கட்டம் வளர்ச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே தமது இலக்கு என ஒரு முன்னாள் ஸ்குவாஷ் வீராங்கனையான பிரவீனா கூறினார்.
2016 ஆம் ஆண்டில் பெர்லிஸில் நடைபெற்ற சுக்குமா போட்டியில் நெகிரி செம்பிலான் மாநிலத்தை தாம் பிரதிநிதித்ததாக அவர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவின் மூலம் தமது இந்த பேக்கரியை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் நோக்கில் இப்பயிற்சியில் கலந்து கொள்ள தாம் ஆர்வம் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.


