Sunday, May 3, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இந்த பயிற்சியின் மூலம் அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்

இது ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் Tiger Empower மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கும் ஒரு சமூக மேம்பாட்டு முயற்சியாகும்.
இந்த ஒத்துழைப்பின் கீழ் இந்திய சிறு குறுந் தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் பற்றி ஒரு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளன.
இந்த இலவச பயிற்சியில் பங்கு பெற 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இலவச பயிற்சியில் பங்கு பெறுவதன் மூலம் தொழில் முன்னேற்றத்திற்கு அதிகமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம் என தாம் கருதுவதாக இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட Chakkra Redesign Enterprise நிறுவனத்தில் உரிமையாளர் மாரி கலையரசன் கூறுகிறார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் இந்த நிறுவனத்தை தாம் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.


வீடுகள், அலுவலகங்கள், கடைகள் போன்றவற்றில் உள் அலங்கார வடிவமைப்பு(Interior design) பணிகளை தமது நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் பிளம்பிங், வயரிங் மற்றும் குளிர்சாதனப் பழுது பார்த்தல் போன்ற தொழில்களையும் தமது நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கோலாலம்பூர், சிலாங்கூர் உட்பட இதர மாநிலங்களிலும் இந்த தொழில்களை தமது நிறுவனம் மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த தொழில் சவால் மிக்கது என்ற போதிலும், துணிச்சலுடன் எதிர் கொண்டு இந்நிறுவனத்வருவதாம் நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.


தமது இந்த தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.
இந்த நிலையில் இந்த பயிற்சியில் பங்கு பெற்று தமது தொழில் வளர்ச்சிக்கு அதிகமான தகவல்களை பெற ஆர்வம் கொண்டுள்ளதாக மாரி தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular