
நீலாய் ஆக 3
அண்மையில் நடந்து முடிந்த நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் நீலாய் தொகுதியில் தாம் தோல்வி கண்ட போதிலும், மக்களுக்கான தமது சேவை தொடரும் என பெர்சாத்து வேட்பாளர் டத்தோ வீ. சரவண குமார் கூறினார்.
இந்த தேர்தலில் தம்மை ஆதரித்து வாக்களித்த அனைவருக்கும் இவ்வேளையில் தாம் நன்றி கூறுவதாக அவர் குறிப்பிட்டார்.
தேர்தலில் வெற்றி தோல்வி என்பது வழக்கமான ஒன்று. அப்படி தோல்விடைந்தால் அதற்காக துவண்டு விடக்கூடாது என்றார் அவர்.
இந்த தொகுதியில் நீண்ட காலமாக இங்குள்ள மக்களுக்கான அனைத்து உதவிகளையும் தாம் செய்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த தொகுதியில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் தான் இந்த தேர்தல் களத்தில் தான் குதித்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இங்குள்ள வாக்காளர்கள் செய்துள்ள முடிவை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த தொகுதி மக்களை பிரதிநிதிக்கும் பிரதிநிதி மக்கள் எதிர் நோக்கும் அடிப்படை பிரச்சனைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மாநில சட்டமன்ற தொகுதிகள் ஜசெகவை சேர்ந்த அருள் குமார் மீண்டும் வெற்றி பெற்றார்.


