Monday, August 3, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து ஜசெக வெளியேறக்கூடும்-டத்தோஸ்ரீ அழகேசு தகவல்!

கோலாலம்பூர் ஆக 3
அண்மையில் நடைபெற்று முடிந்த ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல்களில் ஜசெக அடைந்த மோசமான தோல்வியை தொடர்ந்து, ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து அந்த கட்சி வெளியேற கூடும் என மலேசியா மக்கள் மறுவாழ்வு சங்கத்தின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ அழகேசு கோடி காட்டினார்.
கடந்த மூன்றரை ஆண்டுகளாக
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் ஜசெக முக்கிய பங்காளியாக இருந்து வருகிறது.
இந்த ஒற்றுமை அரசாங்கத்தில் ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தல்களில் ஜசெகவின் பின்னடைவு அந்த கட்சியின் கௌரவத்திற்கு ஒரு பாதிப்பு என்று தான் கூற வேண்டும்.
மேலும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் மூன்று தவணை காலமாக தாம் தற்காத்து வந்த சென்னா தொகுதியில் சுமார் 500 வாக்குகள் வித்தியாசத்தில் அந்தோணி லோக் அடைந்த தோல்வி அந்த கட்சிக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.
இந்த தோல்வியை தொடர்ந்து நெகிரி செம்பிலான் மாநில ஜசெக தலைவர் பதவியிலிருந்து தாம் விலகப் போவதாக அந்தோணி லோக் கூறியுள்ளார்.
ஆனால் இந்த பதவியை தொடர்ந்து வகிக்கும் இவரின் நெருங்கி சகாக்களான வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங், தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை அமைச்சர் டீவன் சிம் மற்றும் பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கோன் யாவ் வலியுறுத்தியுள்ளனர்.
எது எப்படி இருப்பினும் ஜசெக ஒற்றுமை துறை அரசாங்கத்தில் நீடிப்பதா? அல்லது இல்லையா? என்பதை எதிர் வரும் 12 ஆகஸ்டில் நடைப்பெறவிருக்கும் அக்கட்சியின் சிறப்பு பேராளர்கள் மாநாட்டில் முடிவு செய்யப்படும்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளும் சுமார் 4000 பேராளர்கள் இம்முடிவை செய்யவிருக்கின்றனர்.
ஒரு வேளை ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து ஜசெக வெளியேறினால், ஒற்றுமை அரசாங்கம் கவிழும் வாய்ப்பு இருக்குமா? என டத்தோஸ்ரீ அழகேசு வினவினார்.
இருப்பினும் ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து தமது கட்சி வெளியேறினால் கூட, பிரதமர் அன்வாருக்கான ஆதரவு தொடர்ந்து நீடிக்கும் என அந்தோணி லோக் விளக்கம் தந்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular