Monday, August 3, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி’-டத்தோஸ்ரீ சஞ்சீவன்!

ஜெராம் பாடாங் ஆக 3
நடந்து முடிந்த நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் தம்மை ஆதரித்து வாக்களித்த அனைவருக்கும் தாம் நன்றி கூறுவதாக பெர்சாத்து ஜெராம் பாடாங் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கூறினார்.
எந்தவொரு தேர்தலிலும் வெற்றி தோல்வி வழக்கமான ஒன்று தான் என்றார் அவர்.
ஆனால் தமக்கு மதிப்பளித்து வாக்களித்த வாக்காளர்களை என்றுமே நாம் மறந்துவிடக் கூடாது என்றார் அவர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த தொகுதியில் உள்ள மக்களுடன் தாம் நன்றாக பழகி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்..
அரசியல் கட்சி கூட்டணிகளின் வேறுபட்ட ஆதரவின் காரணமாக இந்த தொகுதியில் இம்முறை தம்மால் வெற்றி பெற முடியவில்லை என்றார் அவர்.
ஆனால் இந்த தொகுதியில் உள்ள மக்களுக்கான தமது ஆதரவு என்றும் தொடரும் என அவர் தெரிவித்தார்.
டான்ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெர்சாத்து கட்சி இந்த தோல்வியினால் துவண்டு விடவில்லை என அவர் குறிப்பிட்டார்.இந்நாட்டு மக்களுக்காக ஒரு சிறந்த பிரதிநிதியாக பெர்சாத்து கட்சி விளங்கும் என அவர் சொன்னார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular