
இது ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் Tiger Empower மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கும் ஒரு சமூக மேம்பாட்டு முயற்சியாகும்.
இந்த ஒத்துழைப்பின் கீழ் இந்திய சிறு குறுந் தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் பற்றி ஒரு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளன.
இந்த இலவச பயிற்சியில் பங்கு பெற 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலை மாற்றி அமைக்க இந்த பயிற்சி உதவும் என தாம் நம்புவதாக ஈப்போவை சேர்ந்த பிரவீனா சந்திர பாஸ்கரன் கூறுகிறார்.

கடந்த ஓர் ஆண்டுகளாக Rasagali என்ற பெயரில் தின்பண்டங்கள் மற்றும் சுவை பானங்களை தாம் விற்பனை செய்து வருவதாக அவர் கூறினார்.
காப்பி, தேனீர் மற்றும் பல வகையான திண்பண்டங்களை தாம் ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.
தமது சொந்த தயாரிப்பிலான காபித் தூளை கொண்டு காப்பி தயாரித்து விற்பனை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தாவர அடிப்படையான பொருட்களைக் கொண்டு தான் சுவை பானங்களை தாம் தயாரிப்பதாக அவர் தெரிவித்தார்.
இது ஆரோக்கியமான பானம் என்பதால் மக்கள் விரும்பி அருந்துவதாக அவர் தெரிவித்தார்.

‘எனது இந்த தொழிலுக்கு என் தாயார் உறுதுணையாக இருந்து வருகிறார். நிகழ்ச்சிகளின் போது தமது தின்பண்டம் மற்றும் சுவை பானம் விற்பனை நேரத்தில் எனது தாயார் பெரும் உதவியாக இருந்து வருகிறார்’ என அவர் தெரிவித்தார்.
தமது விற்பனையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஒரு கடையை திறக்க தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த பயிற்சியில் பங்கு பெறுவதன் மூலம் தமது தொழிலை மாற்றி அமைக்க எண்ணம் கொண்டிருப்பதாக பிரவீனா தெரிவித்தார்.


