
இது ஹெனிக்கன் மார்க்கெட்டிங்கின் Tiger Empower மலர் டெய்லி நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் வழங்கும் ஒரு சமூக மேம்பாட்டு முயற்சியாகும் .
இந்த ஒத்துழைப்பின் கீழ் இந்திய சிறு குறுந் தொழில் முனைவோருக்கு டிஜிட்டல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துதல் பற்றி ஒரு இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.
எதிர் வரும் மே 4 ஆம் தேதி முதல் மே 8 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கோலாலம்பூரில் இந்த பயிற்சி நடைபெறவுள்ளன.
இந்த இலவச பயிற்சியில் பங்கு பெற 10 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பயிற்சியில் பங்கு பெறுவதன் மூலம் தொழில் விருத்திக்கு கூடுதல் நுணுக்கங்களை தெரிந்து கொள்ள முடியும் என தாம் நம்புவதாக இந்த பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்ட தலைநகர் ஸ்தாப்பாக்கை சேர்ந்த சுரேஷ் முனியாண்டி கூறினார்.

புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் டிஎஸ்பி பதவியிலிருந்து விருப்ப ஓய்வு (Optional retirement) சுரேஷ் முனியாண்டி சட்ட அமலாக்கங்கள்(Law Enforcement) சம்பந்தப்பட்ட புத்தகங்களை எழுதி வெளியிட்டு வருகிறார்.
மலாய் மொழியில் புலமைப் பெற்ற இவர், தமது அனைத்து புத்தகங்களையும் மலாய் மொழியிலேயே எழுதி வருகிறார்.
தமது இந்த படைப்புகளுக்கு நூருல் ஹூடா என்பவர் துணைபுரிந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதே வேளையில் பகுதி நேர சட்ட விரிவுரையாளராகவும் தாம் பணி புரிந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
சட்டப் படிப்பை மேற்கொள்ளும் குறிப்பாக B40 மாணவர்களுக்கு தமது புத்தகங்கள் ஒரு வழிகாட்டியாக இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
தமது மனைவி புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் உயர்நிலை போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சட்டப் படிப்பை முடித்துவிட்டு ஒரு அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இரண்டாவது மகன் இந்தோனேசியாவில் ஏர் லங்கா பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவ கல்வியை மேற்கொண்டு வருகிறார்’ என்றார் அவர்.
சட்ட அமலாக்கும் தொடர்பாக இன்னும் பல புத்தகங்களை எழுத வேண்டும் என்பதே தமது விருப்பம் என அவர் தெரிவித்தார்.


