Saturday, June 6, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இறுதி நேர தொந்தரவை தவிர்க்க முன்கூட்டியே பயணத்தை திட்டமிடுங்கள்-ஏர் ஆசியா ஆலோசனை!

ஹரிராயா கொண்டாட்ட காலம் நெருங்கி வருவதால் தங்களின் இறுதி நேர தொந்தரவை தவிர்க்க முன்கூட்டியே தங்களின் விமான பயணங்களை திட்டமிடும்படி தனது வாடிக்கையாளர்களுக்கு ஏர் ஆசியா ஆலோசனை கூறியது.
Self check in 14 நாட்கள் முதல் புறப்பாடுக்கு 1 மணி நேரத்திற்கு முன்னர் வரை அனுமதி உள்ளது.
AirAsia MOVE செயலியின் வழி Self check in செய்து உங்களின் மின்னியல் போர்டிங் பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.
அனைத்துலக நகரங்களுக்கான பயணிகள் அந்த நாடுகளுக்கான விசா தேவைகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, விசாக்களை பெற்றுக்கொள்ள வேண்டும். காரணம் அவ்வப்போது இதற்கான மாற்றங்கள் ஏற்படலாம்.
உள்நாட்டு நகரங்களுக்கான பயணிகள் புறப்பட்டு இரண்டு மணி நேரங்களுக்கு முன்பாகவே விமான நிலையத்தை வந்து அடைந்திருக்க வேண்டும்.
அதே வேளையில் அனைத்துலக நகரங்களுக்கான பயணிகள் 3 மணி நேரத்திற்கு முன்னரே விமான நிலையத்தை வந்தடைய வேண்டும்.
இறுதி நேரத்தில் ஏற்படும் தொந்தரவுகளை தவிர்க்க வாடிக்கையாளர்கள் AirAsia MOVE மூலம் மின்னியல் போர்டிங் பாஸ் பெற்றுக் கொள்ளலாம்.
விமான நிலையங்களில் உள்ள கியோஸ்கில் பயணப் பெட்டி களுக்கான அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம்.
தனது பயணிகளுக்கான தடையற்ற பயணத்திற்கு ஏர் ஆசியா அனைத்து வசதிகளையும் செய்து தருகிறது.
இந்த ஹரிராயா கொண்டாட்டம் உங்களை உங்கள் குடும்பத்துடன் இணைக்க அனைத்து வசதிகளையும் ஏர் ஆசியா செய்து தருகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular