
சமூக ஊடகத்தில் வைரலாகி வரும் பொய்யான விமான நிறுவன பயனீட்டாளர் சேவை தொடர்பு எண்கள் மோசடி குறித்து விழிப்பாக இருக்கும் படி தனது வாடிக்கையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் ஏர் ஆசியா நினைவுறுத்தியுள்ளது.
சமூக ஊடகத்தில் ஒரு பொய்யான தொலைபேசி எண் காட்சிப்படுத்தப்பட்டு ஒரு அதிகாரப்பூர்வ விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை தொடர்பு எண் என்ற பொய் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தொடர்பு எண் தங்கள் விமான நிறுவனத்தின் தொடர்பு எண் அல்ல என்பதை ஏர் ஆசியா உறுதிப்படுத்தியது.
தங்களின் விமான டிக்கெட்டுகள் பதிவு தொடர்பான உதவியை நாடும் பயணிகளை குறி வைக்கும் மோசடி இது என ஏர் ஆசியா நினைவுறுத்தியது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வழி கிடைக்கப்பெறும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என ஏர் ஆசியா ச ஆலோசனை கூறியது.
இந்த தரப்பினரின் அடையாளங்கள் உறுதியாக தெரியாவிட்டால், தங்களின் டிக்கெட்டுகள் புக்கிங் மற்றும் பண பட்டுவாடாவை தவிர்க்கும் படி ஏர் ஆசியா வாடிக்கையாளர்களை கேட்டுக்கொண்டது.
வாடிக்கையாளர் சேவைகளை தொலைபேசி அழைப்புகளின் மூலம் தாங்கள் மேற்கொள்ளவில்லை என ஏர் ஆசியா தெளிவுபடுத்தியது.
அனைத்து வாடிக்கையாளர் ஆதரவு சேவை பிரத்தியோகமாக AskBo மூலம் கிடைக்கிறது. இது ஏர் ஆசியாவின் டிஜிட்டல் சேவை தளமாகும்.
AirAsia MOVE செயலியின் வழி AskBo-வை வாடிக்கையாளர்கள் அணுகலாம்.
ஏர் ஆசியாவின் அதிகாரப்பூர்வ செனல்கள் வழி விமான பயணம் மற்றும் டிக்கெட்டுகள் கொள்முதல் குறித்து வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக ஹாரி ராயா பரபரப்பான பயண காலத்தில் விழிப்பாக இருக்கும் படி வாடிக்கையாளர்களை ஏர் ஆசியா கேட்டுக்கொண்டது.
வே
ஏர் ஆசியாவின் அதிகாரப்பூர்வ இணைய தளம் மற்றும் தொடர்பு எங்களை பயன்படுத்தம்படி வாடிக்கையாளர்களுக்கு ஏர் ஆசியா ஆலோசனை கூறியது.
தங்களின் கூடுதல் தகவல்களுக்கு www.airasia.com அல்லது AirAsia MOVE வழி வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ளலாம்.


