Wednesday, April 8, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ரமலான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம், இந்து பிரதிநிதிகள் சமரசம் கண்டனர்!

ரமலான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் மற்றும் இந்து பிரதிநிதிகள் நல்லிணக்க உணர்வுடன் சமரசம் கண்டனர்.
அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள வழிப்பாட்டு தலங்கள் உட்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து இவ்விரு தரப்பினரும் சுமூகமான முறையில் புரிந்துணர்வு கண்டனர்.
இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கங்களின் மன்றம்(மஹிமா) மற்றும் மலேசிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் ஆகிய இருதரப்பிற்கு இடையிலான இந்த முதல் சந்திப்பு நேற்று இங்கு புத்ரா ஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் சமூக மற்றும் சமய தலைவர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த சில வாரங்களாக சமூக வலைத் தலங்களில் சமயம் தொடர்பான வாக்குவாதங்களை தணிக்கும் வகையில் அதன் முதல் கட்டமாக நேற்று இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மஹிமா தலைவர் டத்தோ ந. சிவக்குமார் மற்றும் மலேசிய மலாய் வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆலோசகர் ஜைனுல் ரிஜால் அபு பாக்கார் ஆகிய இருவரும் தலைமையேற்றனர்.
இதனிடையே இந்து மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே நிலவி வரும் சர்ச்சைகளுக்கு ஒரு தீர்வு காண இந்த கூட்டம் மிக முக்கியமாக அமைந்துள்ளதாக டத்தோ ந. சிவக்குமார் கூறினார்.
வழிபாட்டு தல இடங்களுக்கான நில தணிக்கை செய்ய பிரதமர் இலாக்காவின் கீழ் ஒரு சிறப்பு குழுவை அமைக்க இந்த கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அனுமதியற்ற கட்டுமானம் மற்றும் சமய சர்ச்சைகள் குறித்து ஒரு வட்டமேசை கூட்டத்தை நடத்த தாங்கள் திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை மட்டுமே விரும்புவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஒரு சில தரப்பினர் எழுப்பி வரும் சர்ச்சைகளை மறந்து தேசிய ஒற்றுமைக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
இதனிடையே வெளி தரப்பினரின் தலையீடு இல்லாமல் தற்போது நிலை விவரம் பிரச்சனைகளுக்கு பேச்சு வார்த்தையின் மூலம் சமூகமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதே தங்களின் விருப்பம் என மலேசிய முஸ்லிம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஆலோசகர் ரிஜால் அபு பாக்கார் கூறினார்.
தற்போது நினைவு வரும் பிரச்சினைகளுக்கு முறையான பேச்சு வார்த்தைகளின் மூலம் சுமூகமான தீர்வு காண முடியும் ஏன் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் 20 முஸ்லிம் பிரதிநிதிகள் மற்றும் 10 இந்து பிரதிநிதிகள் கலந்து கொண்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular