
முஸ்லிம் அல்லாத தலைவர்களுடன் திரங்கானு மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் சாம்சுரி நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் மஇகா மத்திய செலவை உறுப்பினர் டத்தோ ஜி.சிவா,மசீச இளைஞர் பிரிவு துணைத் தலைவர் மைக் சோங்,TheGoodCastShow நடத்துனர் வினோத் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறிப்பாக திரங்கானு வாழ் மக்கள் இந்த நோன்பு திறப்பு கொண்டாட்டத்தில் கலந்து சிறப்பித்தனர்.
பல இன மக்கள் கலந்து கொண்ட இந்த கொண்டாட்டம் தேசிய ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக டாக்டர் சாம்சுரி கூறினார்.
இந்நாட்டில் பல்லின மக்களிடையே நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


