Thursday, March 12, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கோலாலம்பூர் – வுஹான் நேரடி விமான சேவையை ஏர் ஆசியா மீண்டும் தொடங்குகிறது!

மலேசியாவில் சீன சந்தையை ஆதிக்கம் செலுத்த கோலாலம்பூர்-வுஹான் நேரடி விமான சேவையை ஏர் ஆசியா மீண்டும் தொடங்குகிறது.
கிழக்கு ஆசியாவில் விரிவாக்க வியூகத்தின் ஒரு மைல் கல்லாக இந்த விமான சேவை கருதப்படுகிறது.
மலேசியா மற்றும் சீனாவிற்கிடையே விமான பயண தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், சீனாவில் ஏர் ஆசியா வலிமையாக கால் பதித்து வருகிறது.
சீன சந்தையில் நம்பிக்கையை பிரதிபலிக்கும் வகையில் வுஹான் வழித் தடம் மீண்டும் தொடங்கப்படுகிறது.
எதிர் வரும் 22 மே 2026 முதல் வாரத்திற்கு 4 முறை
கோலாலம்பூர் மற்றும் வுஹான் நகருக்கிடையே ஏர் ஆசியா விமான சேவையை மேற்கொள்ளவிருக்கிறது.
வுஹான் மத்திய சீனாவின் மிக முக்கியமான வர்த்தக மன்றம் கல்வி மையமாகும்.
இந்த வழித் தடம் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் கல்வி தொடர்பிலான பயணத்தை வலுவடைய செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வுஹானில் வசிக்கும் மக்கள் கோலாலம்பூரிலிருந்து ஆசியான், ஆஸ்திரேலியா மற்றும் இதர முக்கிய நகரங்களுக்கு பயணிக்க இந்த வழித் தடம் வழிவகுக்கும்.
இதனிடையே சீனா ஏர் ஆசியாவிற்கு எப்பொழுதுமே ஒரு மூலக்கல் சந்தையாக விளங்கி வருவதாக ஏர் ஆசியா மலேசியாவின் தலைமை நிர்வாகி டத்தோ கேப்டன் பாரே மாஸ்புத்ரா கூறினார்.
கடந்த 2017 ஆம் ஆண்டில் முதல் முறையாக இந்த வழித் தடம் தொடங்கப்பட்டபோது நல்ல வரவேற்பு கிடைத்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இப்பொழுது மீண்டும் இந்த வழித் தடம் தொடங்கப்படுவதால் ஏர் ஆசியா தன் ஆதிக்கத்தை செலுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த நேரடி சேவையின் வழி சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தகம் துரித வளர்ச்சியை காணும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விமான சேவை மீண்டும் தொடங்கப்படுவதை கொண்டாடும் வகையில் கோலாலம்பூரில் இருந்து வுஹான் நகருக்கான அனைத்தும் அடங்கிய ஒருவழிப் பயண கட்டணம் வெ399-லிருந்து தொடங்குகிறது.
அதே வேளையில் வுஹான் நகரிலிருந்து கோலாலம்பூர் காண அனைத்தும் அடங்கிய ஒருவழி பயண கட்டணம் CNY608-லிருந்து தொடங்குகிறது.
வுஹான் மத்திய சீனாவின் மிக முக்கியமான வர்த்தக மற்றும் கல்வி மையமாகும்.
பிராந்திய வர்த்தக மற்றும் புத்தாக்கத்திற்கு இந்த நகரம் முக்கிய பங்காற்றுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular