Tuesday, April 21, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை நினைவு கூறும் நாள் – டாக்டர் பிரேமா


உலகளாவிய நிலையில் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பை நினைவு கூறும் இந்த அனைத்துலக மகளிர் தின கொண்டாட்டத்தில் அனைத்து மகளிர்க்கும் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக மவிஷா கல்வி மற்றும் சமூக அறவாரியத்தின் தோற்றுனர் டாக்டர் பிரேமா கூறினார்.
பெண்களின் உரிமைகள், சமத்துவம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பை நிறைவு கூறும் வகையில் இந்த நாள் ஆண்டுதோறும் மார்ச் 8 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
1900 ஆண்டுகளின் தொடக்கத்தில் பெண்களின் வேலை வாய்ப்பு, உரிமைகள் மற்றும் வாக்குரிமைக்காக நடைபெற்ற போராட்டங்களில் நினைவாக இந்த நாள் உருவானது.
பின்னர் ஐக்கிய நாடுகளின் சபையில் 1975 ஆம் ஆண்டில் இந்த நாளை அதிகாரப்பூர்வமாக உலக அளவில் கடைப்பிடிக்க தொடங்கியது.
இந்நாளை முன்னிட்டு பல நாடுகளில் கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பெண்களை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
சமூக, கல்வி, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் பெண்கள் சாதித்துள்ள வெற்றிகள் இந்த நாளில் சிறப்பாக நினைவு கூறப்படுகின்றன.
பெண்களுக்கு சம உரிமை, பாதுகாப்பு மற்றும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற செய்தியை உலகிற்கு எடுத்துச் சொல்லும் முக்கிய நாளாக அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.


அரசியல், கல்வி, பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் தங்களை உயர்த்திக் கொண்டதை நினைவுறுத்தும் நாள் இது என Tadika Sinar Ideal நிறுவனருமான அவர் குறிப்பிட்டார்.
உலக அரங்கில் ஒரு நாட்டின் அதிபராக, பிரதமராக, மக்களவைத் தலைவராக, மேலவை தலைவராக, அமைச்சராக உட்பட பல உயர்நிலை பதவிகளை தற்போது பெண்கள் வகித்து வருகின்றனர் என்று கூறிக் கொள்வதில் மகளிரான நாம் அனைவரும் பெருமை கொள்ள வேண்டும்.
பெண்கள் சாதிக்க பிறந்தவர்கள், நினைத்ததை முடித்துக் காட்டும் திறமை கொண்டவர்கள், சவால்கள் சந்தித்து சாதனைகளை படைக்கும் ஆற்றல் கொண்டவர்கள்.
இந்த நிலையில் நமது சந்ததியினருக்கு ஒரு முன் உதாரணமாக பெண்கள் திகழ வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
சாதிக்கப் பிறந்த நாம் தோல்விகளைக் கண்டு துவண்டு விடக்கூடாது.
சவால்களை துணிச்சலுடன் எதிர் கொள்ள வேண்டும்.
வரும் காலத்தில் பெண்கள் சரித்திரம் படைக்க இந்த அனைத்துலக மகளிர் தினம் உறுதி கொள்ள வேண்டும் என டாக்டர் பிரேமா கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular