
எதிர் வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் தங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் தேசிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண உதவுவோம் என மலேசியர்களை கெராக்கான் தேசியத் தலைவர் டத்தோ டோமினிக் லாவ் கேட்டுக்கொண்டார்.
கெராக்கானின் ஒரே சட்டமன்ற உறுப்பினரான கூலிம் சட்டமன்ற உறுப்பினர் வோங் சியா ஷென் மூலம் கெடாவில் பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
பாஸ் கட்சியின் மந்திரி பெசார் சானுசி முகமட் தலைமையிலான கெடா மாநில அரசாங்கத்தில் கெராக்கான் பொதுச் செயலாளர் வோங் ஆட்சி குழு உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
பினாங்கு மாநில அரசாங்கத்திற்கு 39 ஆண்டுகள் தலைமை வகித்து கெராக்கான் தனது ஆற்றலை நிரூபித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கட்சியின் நிர்வாகம் மற்றும் தலைமைத்துவ ஆற்றலை இது நிரூபித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
‘எங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள், வழிதடம் தாருங்கள், தேசிய பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு காண்போம்’ என்றார் அவர்.
கெடாவில் கட்சியின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினரை கொண்டு முஸ்லிம் அல்லாதவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுள்ளோம் என அவர் சுட்டிக் காட்டினார்.
‘எங்களுக்கு 10 பிரதிநிதிகளை வழங்கினால், அதிகமான பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு காண்போம்’ என அவர் தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் எதிர்க்கட்சி கூட்டணியின் பங்காளி கட்சியாக கெராக்கான் இருந்து வருகிறது.
கடந்த 2023 பினாங்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் 11 தொகுதிகளை கைப்பற்றியது.
இந்த தேர்தலில் கெராக்கான் ஒரு தொகுதியை கூட கைப்பற்றவில்லை.
இந்த தேர்தலில் பாஸ் 7 தொகுதிகளையும் பெர்சாத்து 4 தொகுதிகளையும் கைப்பற்றியது.
பினாங்கு அரசியலில் சுமார் 40 ஆண்டு காலமாக ஆக்கிரமித்த கெராக்கான் கடந்த 2008 ஆம் ஆண்டு பொது தேர்தலில் படுதோல்வியை தழுவியது.


