
கடந்த சில தினங்களுக்கு முன் சிறப்பாக நடைபெற்ற பத்து மலை தைப்பூச கொண்டாட்டத்தில் கெராக்கான் கட்சி தண்ணீர் பந்தல் நிகழ்வை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்தது.
கடந்த ஜன 30 ஆம் தேதி இரவு ஜாலான் துன் எச்.எஸ் லீ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிந்து வெள்ளி ரதம் ஊர்வலமாக புறப்படுவதற்கு முன்பாகவே கெராக்கான் தலைமையகம் லெபோ அம்பாங்கில் ரசாக் நகை கடைக்கு வெளியே இந்த தண்ணீர் பந்தலை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது.
ரத ஊர்வலத்துடன் வந்த பக்தர்களுக்கு சுமார் 10,000 குடிநீர் போட்டல்கள் வழங்கப்பட்டது.
வெள்ளி ரத ஊர்வலத்தில் உடன் வந்த ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் அறங்காவலரான டத்தோ ந. சுகுமாரை கெராக்கான் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டோமினிக் லாவ், உதவித் தலைவர் டத்தோ பரமேஸ்வரன் மற்றும் கட்சியின் உயர் அதிகாரி பிரபா ஆகியோர் இன் முகத்துடன் வரவேற்றனர்.
மேலும் உடன் நடந்த சிறப்பு பூஜைகளும் இவர்கள் கலந்து கொண்டனர்.


