
உலக பாரம்பரிய கலாச்சார மன்றத்தின் மலேசிய கிளையின் தேசிய தலைவராக டாக்டர் ராகவி பவனேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ராக் ஸ்டார் மிடியா குளோபல் நிறுவனத்தின் நிறுவனருமான இவரின் இந்த நியமனம் 15 ஜனவரி 2026 முதல் 31 டிசம்பர் 2028 வரை அமலில் இருக்கும்.
சங்கீத நாட்டிய குருகுலம் ஆர்ட்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளருமான டாக்டர் ராகவி, இந்திய சமூகத்தை அடிப்படையாகக் கொண்டு பல நிகழ்ச்சிகளை படைத்துள்ளார்.
தமது ராக் ஸ்டார் மிடியா குளோபல் நிறுவனத்தின் வழி பல விருது நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார்.
மேலும் இவரின் அர்ப்பணிப்பை பாராட்டும் வகையில் இவருக்கு பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 செப்டம்பர் மாதம் தென் கொரியாவின் சியோல் நகரில் நடைபெற்ற HWPL உலக அமைதி மாநாட்டில் இவர் கலந்து கொண்டார்.


