Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பாஸ் ஆதரவு பேரவையின் தைப்பூச தண்ணீர் பந்தல்!

தைப்பூச கொண்டாட்டத்தை முன்னிட்டு கூட்டரசு பிரதேச பாஸ் ஆதரவு பேரவை தண்ணீர் பந்தல் நிகழ்வை வெகு சிறப்பாக நடத்தியது.
வெள்ளி ராதை ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு இந்த தண்ணீர் பந்தலில் உணவுகள் மற்றும் பானங்கள் வழங்கப்பட்டன.
ஜன 30 இரவு ஜாலான் துன் எச்.எஸ். லீ ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட வெள்ளி ரத ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு தலைநகரில் உள்ள பாஸ் தலைமையகத்திற்கு முன்புறம் ஏற்பாடு செய்யப்பட்ட தண்ணீர் பந்தலில் உதவும் குளிர்பானமும் வழங்கப்பட்டன.


சுமார் 5,000 உணவு பொட்டலங்கள் மற்றும் குளிர்பானங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த தண்ணீர் பந்தல் திட்டத்திற்கு டாக்டர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் பாண்டார் துன் ரசாக்,லெம்பா பந்தாய் மற்றும் செகாம்புட் பாஸ் ஆதரவு பேரவை சேர்ந்த 30 செயலவை ஒன்று உறுப்பினர்கள் பக்தர்களுக்கு உணவுகளும் பானங்களும் எடுத்து வழங்கினர்.
பாஸ் மற்றும் பாஸ் ஆதரவு பேரவையை பற்றி பொதுமக்கள் நன்கு தெரிந்து கொள்ள இந்த தண்ணீர் பந்தல் ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியதாக சுபாஷ் சந்திர போஸ் கூறினார்.
இந்த தண்ணீர் பந்தல் வெற்றிகரமாக நடைபெற முழுமையான ஆதரவு வழங்கிய பாஸ் தலைமைத்துவம் மற்றும் இதர தரப்பினருக்கு தாம் நன்றி கூறுவதாக அவர் தெரிவித்தார் ன.
தைப்பூசக் கொண்டாட்டம் என்பது இந்துக்களுக்கு மிக மிக முக்கியமான பாரம்பரிய கொண்டாட்டமாகும் என்றார் அவர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular