Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பதிவு பெறாத வழிபாட்டுத் தலங்கள் பிரச்சனைக்கு சட்டத்திற்கு உட்பட்டு நல்லிணக்கத்துடன் தீர்வு காண வேண்டும்!

பதிவு பெறாத வழிபாட்டுத் தலங்கள் பிரச்சனைக்கு சட்டத்திற்கு உட்பட்டு நல்லிணக்கத்துடன் தீர்வு காண வேண்டும் என பாஸ் ஆதரவு பேரவையின் தகவல் பிரிவு தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
அனுமதி பெறாத வழிபாட்டு தலங்கள் உட்பட கட்டமைப்புகள் ஊராட்சி மன்றம், மாவட்ட அலுவலகம் மற்றும் அமலாக்கு பிரிவு ஆகிய தரப்பினரின் அதிகாரத்திற்கு உட்பட்டவை என்றார் அவர்.
நிர்ணயிக்கப்பட்டுள்ள சட்டத்தின் அமலாக்கத்திற்கு உட்பட்டு இப்ப பிரச்சனைகள் சுமூகமாக தீர்வு காணப்பட வேண்டும் என திரங்கானு மாநில மந்திரி பெசாரின் முஸ்லிம் அல்லாதவர்கள் விவகார பிரிவின் சிறப்பு அதிகாரியுமான அவர் சொன்னார்.
இனம் மற்றும் மதத்தின் உணர்வுகளை பாதிக்காமல் நல்லிணக்கத்தின் அடிப்படையில் சட்டத்திற்கு உட்பட்டு இப்ப பிரச்சனை தீர்வு காணப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
பல்லினம் மற்றும் மதங்களைக் கொண்ட சமூகத்தில் அமைதியுடன் வாழ வேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஒருவருக்கு ஒருவர் மதிப்பளிப்பதை அடிப்படையாகக் கொண்டு நல்லிணக்கத்துடன் இந்நாட்டு மக்கள் வாழ்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
மலேசியா அனைத்துலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையும் இதற்கு சான்று இயன்றவர்.
மலேசியாவின் நல்லிணக்கம் பிறர் தவறாக புரிந்து கொள்ளக் கூடாது என்பதை நாம் உணர்த்த வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்படும் அமலாக்க நடவடிக்கைகளை பாஸ் ஆதரவு பேரவை ஆதரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நாடு தொடர்ந்து வளர்ச்சிக்கான பல்லின மக்களுக்கிடையே புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை மிக அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular