
தனது உறுப்பினர்களுக்கு கூடுதல் சலுகைகளை வழங்கும் வகையில் AirAsia Rewards மற்றும் Versa கூட்டு ஒப்பந்தத்தை அறிவித்தன.
கேப்பிட்டல் ஏ நிறுவனத்தின் லாயல்டி என பிரிவான AirAsia Rewards முன்னணி டிஜிட்டல் செல்வ மேலாண்மை தளமான Versa-வுடன் கூட்டு ஒப்பந்தத்தை செய்து கொண்டது.
இதன் மூலம் AirAsia Rewards தனது உறுப்பினர் வலையமைப்பை நிதி சேவைத்துறைக்குள் விரிவுபடுத்தி, ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான லாயல்டி தளமாக தனது நிலையை மேலும் வலுப்படுத்துகிறது.
இந்த கூட்டு ஒத்துழைப்பு,Versa மூலம் ஆரோக்கியமான நிதி நடவடிக்கைகளை ஊக்குவிப்பதோடு, கேப்பிட்டல் ஏ சூழமைப்பின் கீழ் பயணம் மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த பரிசுகளையும் ஒருங்கிணைக்கும் தடையற்ற புள்ளி மதிப்பு முன்மொழிவை வழங்குகிறது.
இதன்வழி Versa மூலம் பெறப்படும் ஏர் ஆசியா புள்ளிகளை AirAsia MOVE செயலியின் வழியாக விமான பயணங்கள், ஹோட்டல் தங்குமிடங்கள் மற்றும் பலவற்றிற்காக பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனிடையே ஏர் ஆசியா புள்ளிகள் பயனீட்டை விரிவாக்குவதில் தாங்கள் கவனம் செலுத்தி வருவதாக கேப்பிட்டல் ஏ தலைமை செயல் நடவடிக்கை அதிகாரி சுபாஷினி சிவதாஸ் கூறினார்.
உறுப்பினர்கள் தங்களின் அன்றாட பரிவர்த்தனையின் மூலம் கூடுதல் சலுகைகள் பெறுவதை உறுதி செய்வதில் தாங்கள் கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஏர் ஆசியா புள்ளிகளை பெறவும் அதை பயன்படுத்துவும் உறுப்பினர்களை தங்கள் ஊக்குவித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.


