
ஆசியா பசிபிக் முழுவதும் உடற்பயிற்சி சமூகங்களை ஒன்றிணைக்க உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா மற்றும் ஹைராக்ஸ்(HYROX) நிறுவனம் கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்து விட்டது.
இந்த உடன்படிக்கையின் கீழ் ஆசிய பசிப்பிக் பகுதியில் உள்ள 15க்கும் மேற்பட்ட நகரங்கள் உள்ளடக்கியுள்ளது.
2026 ஆம் ஆண்டில் 250,000 HYROX விளையாட்டாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இணைப்பு உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மற்றும் பயணத்தை ஒருங்கிணைத்து ஆசியான் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட பகுதிகளில் உள்ள சமூகங்களை இணைக்கும் ஒரு முக்கிய முயற்சியாகும்.
அணுக்கள் தன்மை மற்றும் சமூகத்தின் வலிமை என்று பொதுவான நம்பிக்கையின் அடிப்படையில் உருவான இந்த கூட்டு முயற்சி, வேகமாக வளர்ந்து வரும் ஆசிய பசிபிக் உடற்பயிற்சி இயக்கத்தை ஆதரிக்கும் AirAsia மற்றும் HYROX நிறுவனங்களின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
HYROX விளையாட்டாளர்கள், பங்கேற்பாளர்கள் மற்றும் ரசிகர்கள் முக்கிய போட்டி நகரங்களுக்கு எளிதாக பயணிக்க இந்த கூட்டு ஒப்பந்தம் உதவுகிறது.
இதன் மூலம் பயணம் என்பது ஒரு அனுபவத்தை உருவாக்கும் கருவியாகவும், பகிரப்பட்ட இலக்குகளை அடையும் ஊக்கியாகவும் மாறுகிறது.
இதனிடையே ஏர் ஆசியா DNA-வின் முக்கிய அங்கமாக விளையாட்டு எப்போதும் இருந்து வருவதாக ஏர் ஆசியா எக்ஸ் தலைமை வர்த்தக பிரிவு அதிகாரி அமான்டா வூ கூறினார்.

எங்கள் ‘Dare to Dream’ மதிப்பீட்டை நாங்கள் தொடர்ந்து முன்னெடுக்கிறோம்.
ஆசியான் காட்பந்து, சீ விளையாட்டு போட்டி, Ultimate Fighting Championship மற்றும் கடந்த ஆண்டு தொடங்கிய ஏர் ஆசியா ரேட்ரன் போன்று உலகளாவிய விளையாட்டு தலங்களுடன் நாங்கள் இணைந்துள்ளோம்.
உடற்பயிற்சி இன்று உலகளாவிய வாழ்க்கை முறையாக மாறிவரும் இந்த நேரத்தில் HYROX நிறுவனத்துடன் ஆன இந்த கூட்டு ஒப்பந்தம் மிகவும் பொருத்தமானது.
130 க்கும் மேற்பட்ட நகரங்களை உள்ளடக்கிய ஏர் ஆசியா வலையமைப்பு மற்றும் விமானம், ஹோட்டல் வசதிகளை ஒரே தளத்தில் வழங்கும் AirAsia MOVE மூலம், மக்கள் விரும்பும் விளையாட்டுகளுக்கு அவர்களை மேலும் அருகில் கொண்டு வர விரும்புகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
HYROX உடனான இந்த கூட்டணி மூலம் சமூகங்களை இணைக்கும் எங்கள் இலக்கை தொடர விரும்புகிறோம் என்றார் அவர்.
HYROX சமூகத்துடன் நெருக்கமாக இருக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட HYROX Training Club ஜிம்களுடன் ஏர் ஆசியா இணைந்து செயல்படுகிறது.
இவ்வாண்டில் ஓசாகா, பேங்காக், சிங்கப்பூர், ஹாங்காங், இன்சியான் நகரங்களில் நடைபெறும் HYROX போட்டிகளுக்கு பதிவு செய்யும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் குறிப்பிட்ட காலப்பகுதியில் விமான டிக்கெட்களுக்கு 10 விழுக்காடு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என அவர் சொன்னார்.
இதன் மூலம் அவர்கள் இந்தப் போட்டிகளில் கவனம் செலுத்தி முழுமையான அனுபவத்தை பெற முடியும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே HYROX என்பது ஒரு விளையாட்டு போட்டியை விட அதிகமான ஒன்று என HYROX APAC நிர்வாக இயக்குனர் கேரி வான் கூறினார்.
இது சமூக உணர்வு, தொடர்ச்சியான முயற்சி மற்றும் பகிரப்பட்ட இலக்குகளை மையமாகக் கொண்ட வாழ்க்கை முறை ஏன் அவர் குறிப்பிட்டார்.

இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் எங்கள் விளையாட்டாளர்கள் மற்றும் ரசிகர்கள் பயணத்தை மேலும் எளிதாக்கி, முக்கிய சந்தைகளில் HYROX-ன் இருப்பை வலுப்படுத்தும் என அவர் தெரிவித்தார்.
இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிகழ்வில்,’keep Moving, keep Rising’ இன்று கருப்பொருளுடன் கூடிய சிறப்பு இணை பிராண்டிங் வடிவமைப்பையும் ஏர் ஆசியா மற்றும் HYROX வெளியிட்டன.
இந்த பிரதான நிகழ்ச்சியில் ஏர் ஆசியா எக்ஸ் குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ,ஃபோ லிங்கம் ADE நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி மஹேஸ் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


