Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு சுமார் 4,500 விமான சேவைகளை ஏர் ஆசியா வழங்குகிறது!

எதிர் வரும் சீனப் புத்தாண்டு பயணத்திற்கான தேவைகளை கருத்தில் கொண்டு உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா 4,434 விமான சேவைகளை வழங்குகிறது.
எதிர் வரும் 12 பிப்ரவரி முதல் 24 பிப்ரவரி 2026 வரை இந்த விமான சேவைகள் அமலாக்கத்தில் இருக்கும்.
அதே வேளையில் விமான பயணத்தின் சேவைகள் அதிகரிப்பின் காரணமாக 150 கூடுதல் உள்நாட்டு விமான சேவைகளை ஏர் ஆசியா வழங்குகிறது.
இதனிடையே சீனப் புத்தாண்டு கொண்டாட்டம் ஒரு பரபரப்பான பயண காலம் என்பதால், பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய தாங்கள் தயார் நிலையில் உள்ளதாக ஏர் ஆசியா மலேசியாவின் தலைமை நிர்வாகி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்.
இந்த காலகட்டத்தில் தீபகற்பம் மலேசியா மற்றும் கிழக்கு மலேசியாவில் குறிப்பிட்ட விமான சேவைகளுக்கு மானியத்துடன் அனைத்தும் அடங்கிய ஒருவழிப் பயண கட்டணம் வெ600 ஏர் ஆசியா வழங்குகிறது என்றார் அவர்.
இந்த சிறப்பு கட்டணத்தில் 20 கிலோ கிராம் இலவச பேக்கெஜ் அடங்கும் என அவர் சொன்னார்.
இந்த பரபரப்பான கொண்டாட்ட காலங்களில் பயணிகள் மலிவான கட்டணத்தில் பயணம் செய்வதை ஏர் ஆசியா உறுதி செய்வதாக அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரிலிருந்து கோத்தா கினபாலு,பிந்துலு,கூச்சிங்,லாபுவான்,
மீரி,சீபு,சாண்டகான் மற்றும் தாவாவ் ஆகிய நகரங்களுக்கு ஏர் ஆசியா விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.


அதே வேளையில் பினாங்கு மற்றும் ஜொகூர் பாருவிலிந்து தீபகற்ப மலேசியாவின் சில குறிப்பிட்ட நகரங்களுக்கு ஏர் ஆசியா விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
கூடுதலாக கோத்தா பாருவிலிருந்து கிழக்கு மலேசியாவின் கோத்தா கினபாலுவிற்கு ஏர் ஆசியா சிறகடிக்கிறது.
தீபகற்ப மலேசியாவின் கிழக்குக்கரை பயணிகளின் பயண தேவையை பூர்த்தி செய்ய இந்த விமான சேவைகளை ஏர் ஆசியா வழங்குகிறது என அவர் தெரிவித்தார்.
இதனிடையே இந்த பரபரப்பான பயண காலத்தில் விமான நிலையத்தில் நெரிசலை தவிர்க்க புறப்பாட்டிற்கு முன்பாகவே 14 நாட்களுக்கு முன்னரே airasia.com அல்லது AirAsia MOVE செயலியின் வழி செக்-இன் செய்து கொள்ளுமாறு பயணிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular