Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ் ஊடகவியாளர்களுடன் முஹிடின் விருந்துபசரிப்பு!

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தமிழ் ஊடகவியாளர்களுக்கு அண்மையில் இரவு விருந்துபசரிப்பு ஒன்றை வழங்கினார்.
பிரிக்பீல்ட்ஸில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் நடைபெற்ற இந்த விருந்து நிகழ்ச்சியில் 20க்கும் மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விருந்து நிகழ்ச்சி பெர்சாத்து கட்சியின் மலாய்கார்கள் அல்லாத பிரிவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்றது.
நாட்டின் அரசியல் நிலவரம் உட்பட பல்வேறு விவகாரர்கள் குறித்து பெர்சாத்து தலைவரும் முன்னாள் பிரதமருமான முஹிடின் பேசினார்.


பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியில் பல இந்திய கட்சிகள் இணைந்து அந்த கூட்டணி வலிமையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில் மஇகா இந்த கூட்டணியில் இணைய வெறுப்பதாக அவர் கோடிக்காட்டினார்.
எதிர்வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் அனைத்து இந்திய கட்சிகளுக்கும் முறையை தொகுதிகள் ஒதுக்கீடு செய்து தரப்படும் என அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular