
சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் ‘டத்தோ’ விருது பெற்றார்.
நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முரிஸ்ஸின் 78 ஆவது பிறந்த நாளையொட்டி சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரனுக்கு ‘டத்தோ’ விருது வழங்கப்பட்டது.

இன்று இஸ்தானா பெசார் ஸ்ரீ மெனாந்தியில் நடைபெற்ற விருதளிப்பு வைபவத்தில் இவருக்கு ‘டத்தோ’ அந்தஸ்தை பெறும் டர்ஜாட் செத்தியா பக்தி நெகிரி செம்பிலான்(டி.எஸ்.பி.என்.எஸ்) விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
மக்களுக்கு பல்வேறு நிலையில் இவர் ஆற்றி வந்த சேவைகளை கருத்தில் கொண்டு இந்த உயரிய விருது இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 4 தவணைக் காலமாக ஜசெகா சட்டமன்ற உறுப்பினராக சேவையாற்றி வருகிறார்.
நெகிரி செம்பிலான் மாநில ஜசெகா துணைத் தலைவருமான குணசேகரன் கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் வலிமையான ஆதரவை பெற்று வருகிறார்.


