Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தைப்பூச விடுமுறை : கெடா மந்திரி பெசாருக்கு மலேசிய இந்திய மக்கள் கட்சி நன்றி கூறியது!

எதிர் வரும் தைப்பூச கொண்டாட்டத்திற்கு கெடா மாநிலத்தில் சிறப்பு விடுமுறை அறிவித்துள்ள மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சானுசி நோருக்கு கெடா மலேசிய இந்திய மக்கள் கட்சி நன்றி கூறியது.
வரும் பிப்ரவரி 1 ஆம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூச திருவிழாவிற்கு மாநிலத்தில் சிறப்பு விடுமுறை அறிவித்துள்ள மந்திரி பெசாரை மலேசிய இந்திய மக்கள் கட்சி பாராட்டுவதாக கட்சியின் கெடா மாநிலத் தலைவர் விமலன் தியாகராஜன் கூறினார்.
பல்லின மக்கள் மற்றும் மாதத்திற்கு கெடா மாநில அரசாங்கம் மதிப்பளித்து வருவதை இது வெளிப்படுத்துவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் முகமட் சானுசி தலைமையிலான மாநில அரசாங்கம் சமயம் மற்றும் இன பேதமின்றி அனைத்து மக்களுக்கின் தேவைகளை உணர்ந்து செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கெடா மாநில இந்துக்கள் தங்களின் சமய நம்பிக்கையை பின்பற்ற தூர நோக்கு சிந்தனையுடன் முகமட் சானுசி தலைமையிலான மாநில அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மாநிலத்தில் உள்ள இந்துக்களின் தேவைகளை உணர்ந்து அதற்கு மாநில அரசாங்கம் முன்னுரிமை வழங்கி வருகிறது என்றார் அவர்.
கெடா மந்திரி பெசாரின் மாநில அரசாங்கம் தலைமைத்துவத்திற்கு கெடா மலேசிய இந்திய மக்கள் கட்சி எப்பொழுதுமே பிளவு படாத ஆதரவை தொடர்ந்து வழங்கி வரும் என அவர் உறுதியளித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular