
ஏர் ஆசியா எக்ஸ் குழுமத்தின் புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக ஃபோ லிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏர் ஆசியா குழுமத்தின் வான் போக்குவரத்து வர்த்தகத்தின் ஒருங்கிணைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையின் கீழ் ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரியாக பதவி வகித்து வந்த பெஞ்யாமின் இஸ்மாயில் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக பதவி மாற்றம் செய்யப்பட்டார்.
கடந்த 2010 ஆம் ஆண்டில் ஏர் ஆசியாவில் இணைந்த பெஞ்யாமின் 2015 செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் அந்நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாக பதவி வகித்து வந்தார் என ஏர் ஆசியா எக்ஸ் மலேசியா பங்கு சந்தைக்கு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியது.
இதனிடையே ஏர் ஆசியா எக்ஸ் குழுமத்தின் புதிய தலைமை செயல்முறை அதிகாரியாக தர்மலிங்கம் கனகலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மலேசிய பங்கு சந்தைக்கு வெளியிட்ட மற்றொரு அறிக்கையில் ஏர் ஆசியா எக்ஸ் கூறியது.
ஃபோ லிங்கம் என பிரபலமாக அழைக்கப்படும் இவர் கடந்த 2001 ஆம் ஆண்டில் ஏர் ஆசியாவில் இணைந்தார்.
ஏர் ஆசியா தோற்றுனர் டான்ஸ்ரீ டோனி பெர்னான்டஸின் வலது கரமாக கருதப்படும் 60 வயதுடைய இவர், ஏர் ஆசியா மற்றும் ஏர் ஆசியா எவியேஷின் குழுமத்தின் பல்வேறு உயர் பதவிகளை வைகித்து வந்துள்ளார்.
மூத்த நிர்வாகி, குழுமத்தின் துணை தலைமை செயல்முறை அதிகாரி மற்றும் விமான நிறுவனங்களின் குழும தலைவர் உட்பட பல்வேறு உயர்நிலை பதிவுகளை இவர் வகித்து வந்துள்ளார்.

ஏர் ஆசியா எக்ஸ் குடும்பத்தின் தலைமை செயல்முறை அதிகாரி என்ற வகையில் இந்த விமான நிறுவனத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல இவர் முக்கிய பங்காற்றுவார்.
மலேசியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் ஏர் ஆசியாவின் செயல் நடவடிக்கைகள் வலிமைப்படுத்துவது இவர் கவனம் செலுத்தி வருவார்.
இந்த குழுமத்தில் மற்றொரு புதிய விமான நிறுவனம் உதயத்தை ஃபோ லிங்கம் கண்காணித்து வருவார்.


