
பத்து மலை தைப்பூச கொண்டாட்டத்திற்கு 24 மணி நேர இலவச ரயில் சேவை வழங்கப்பட விருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
போக்குவரத்து அமைச்சின் ஒத்துழைப்புடன் கேடிஎம் இந்த 24 மணி நேர இலவச ரயில் சேவைகள் வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.
30 ஜனவரி முதல் 2 பிப்ரவரி வரை இந்த இலவச ரயில் சேவைகள் வழங்கப்படும்.
31 ஜனவரி காலை 12 மணி முதல் காலை 1 பிப்ரவரி நள்ளிரவு 11.59 மணி வரை இந்த ரயில் சேவைகள் செயல்படும்.
தைப்பூசம் திருவிழா பிப்ரவரி 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
சுமார் 25 லட்சம் பேர் இந்த ரயில் சேவைகளை பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுவதாக இன்று கேஎல் சென்ட்ரலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
இவ்வாண்டு பத்து மலை தைப்பூசம் கொண்டாட்டத்திற்கு கூடுதல் 216 ரயில் சேவைகள் செயல்படும் என்றார் அவர்.
இந்த காலகட்டத்தில் 28 ரயில் நிலையங்கள் தொடர்ந்து 24 மணி நேரங்களுக்கு செயல்படும் என அவர் தெரிவித்தார்.
இதனிடையே சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு கேடிஎம் கூடுதல் இடிஎஸ் ரயில் சேவைகளை வழங்கும் என அவர் குறிப்பிட்டார்.
சீன புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு இடிஎஸ் ரயில் சேவைகளுக்கான டிக்கெட்டுகள் விற்று முடிந்து விட்டதால், இந்த கூடுதல் ரயில் சேவைகள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜானா சந்திரன் முனியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


