
பேராக் மலேசிய இந்திய மக்கள் கட்சி மகளிர் அணியின் மகளிர் பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த மகளிர் பொங்கல் விழா எதிர் வரும் 25 ஜனவரி 2026 மாலை 4 மணிக்கு ஈப்போ ஸ்ரீ மகா கருமாரியம்மன் முனீஸ்வரர் ஆலய வளாகத்தில் நடைபெறும் என பேராக் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் மகளிர் அணி தலைவி கீதா ராஜூ கூறினார்.
இந்த மகளிர் பொங்கல் விழாவிற்கு மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தேசியத் தலைவர் புனிதன் பரமசிவன் தலைமையேற்கவிருப்பதாக அவர் சொன்னார்.
பேராக் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தலைவர் டத்தோ சத்திய பாலா ஆதரவுடன் நடைபெறும் இந்த பொங்கல் விழாவில் 10 மகளிர் பொங்கல் பானை வைத்து பொங்கலிடுவார்கள்.

மேலும் கருமாரி அம்மனுக்கு 21 சீர் எடுக்கப்படும் என அவர் சொன்னார்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு பஜனை நடைபெறும் என்றார் அவர்.
பொங்கல் கொண்டாட்டம் நமது பாரம்பரிய கொண்டாட்டம் என்பதால் இந்தக் கொண்டாட்டத்திற்கு வருகை புரியும் அனைவரும் நமது பாரம்பரிய உடையுடன் வரும்படி அவர் பணிவுடன் கேட்டுக் கொண்டார்.
பேராக் மலேசிய இந்திய மக்கள் கட்சியின் இது முதலாவது பொங்கல் கொண்டாட்டம் என்பதால் சுற்று வட்டாரத்தை சேர்ந்த அனைத்து இந்துக்களும் திரளாக கலந்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த கொண்டாட்டத்தில் சுமார் 100 பேருக்கு சைவ உணவு வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
பொங்கல் நமது பாரம்பரிய கலாச்சார கொண்டாட்டம் என்பதால் இந்த பொங்கல் விழாவை ஒன்று கூடி ஒற்றுமையாக கொண்டாடுவோம் என அவர் கேட்டுக் கொண்டார்.


