
சிரம்பான் ஜன 19
நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முரிஸ்ஸின் 78 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரனுக்கு ‘டத்தோ’ விருது வழங்கப்பட்டது.
நெகிரி செம்பிலான் ஆட்சியாளரின் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் 532 பேருக்கு உயரிய விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த கொண்டாட்டத்தில் தலைமை கணக்காய்வாளர் டத்தோஸ்ரீ வான் சுராயவுக்கு
‘டத்தோஸ்ரீ’ உயரிய விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீ தஞ்சோங் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. ராஜசேகருக்கு ‘டத்தோ’ விருது வழங்கப்பட்டது.
கடந்த நான்கு தவணை காலமாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் குணசேகரனின் அர்ப்பணிப்பு மற்றும் சேவைக்காக இந்த உயரிய விருது வழங்கப்பட்டது.


