Friday, May 1, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

உயிருக்கு மதிப்பளித்து மனிதநேய சேவையை வழங்கி வரும் PCAJB தன்னார்வலர் சங்கம்

புற்று நோய் போன்ற கொடிய நோயின் காரணமாக மரணத்தின் இறுதிக் கட்டத்திலும் மனித வாழ்க்கைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதை தனது தன்னார்வ சேவைகளின் மூலம் ஜொகூர் பாரு நோய்த் தடுப்பு பராமரிப்பு சங்கம்(PCAJB) மக்களுக்கு உணர்த்தி வருகிறது.
புற்று நோயின் 4-ம் கட்டத்தில்(stage 4) உள்ள நோயாளிகள் கடுமையான வலி, மன உளைச்சல் உட்பட பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இந்த நோயாளிகள் மருத்துவமனைகளில் அல்லது வீடுகளில் இருந்து சிகிச்சை பெற்று வந்தாலும் இந்த கொடூரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
வாழ்க்கையின் எல்லையில் உள்ள இதுபோன்ற நோயாளிகளுக்கு தான் ஜொகூர் பாரு நோய்த் தடுப்பு பராமரிப்பு சங்கம் தனது உதவி கரங்களை நீட்டி வருகிறது.
இது போன்று நோயாளிகளுக்கு லாபத்தை எதிர்பார்க்காமல் இலவசமாக மனித நேய சேவைகளை இந்த சங்கம் வழங்கி வருகிறது.
இந்த நோயாளிகள் இருக்கும் வீடுகளுக்கு சென்று நோயாளிகளுக்கு தங்களால் இயன்ற அனைத்து நோய் தடுப்பு சிகிச்சைகளை இவர்கள் வழங்கி வருகின்றனர்.



இறுதிக் கட்டத்திலும் மனித வாழ்க்கைக்கு மரியாதை கொடுக்க வேண்டும்!
ஒரு உயிரின் பிரிவு சாதாரணமான ஒன்றல்ல. மரணத்தின் இறுதிக் கட்டத்திலும் மனித வாழ்க்கைக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என இந்த சங்கத்தின் மூத்த செவிலியர் மேலாளர் பிரேமலா கூறுகிறார்.
புற்றுநோய் மற்றும் குணமடைய முடியாத கொடூர நோய்களால் பாதிக்கப்பட்ட பல நோயாளிகள், வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் வழி மற்றும் மன அழுத்தத்துடன் போராடி வருகின்றனர்.
இவர்களுக்கு மன நிம்மதியும் மரியாதையும் வழங்குவதே PCAJB சங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
புற்றுநோய் மற்றும் நோய் தடுப்பு பராமரிப்பு துறையில் 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், பல நோயாளிகளும் குடும்பங்களும் சந்திக்கும் உடல் மற்றும் மன வேதனைகளை நான் நேரடியாக கண்டுள்ளேன்.
இந்த அனுபவங்களே, நோயாளிகள் தங்கள் இல்லத்திலேயே அன்புடனும் பாதுகாப்புடனும் பராமரிக்கப்பட வேண்டும் என்ற நம்பிக்கையை மேலும் உறுதி செய்துள்ளது.
இந்த சங்கத்தின் மூலம் நாம் இலவசமாக வீட்டு அடிப்படையிலான நோய் தடுப்பு பராமரிப்பு சேவைகளை வழங்கி வருகிறோம்.
தங்களின் இந்த மனிதநேய சேவை மேலும் பல நோயாளிகளையும் குடும்பங்களையும் சென்றடைய மக்களின் ஆதரவும் நன்கொடையும் மிக அவசியமாகும்.
எங்களின் இந்த அர்ப்பணிப்பு சேவிக்கு மக்களின் உதவிக்கரம் மிக அவசியமாகும்.
மக்களின் நன்கொடைகளின் மூலம் இன்னும் அதிகமான மனிதநேய சேவைகளை இந்த சங்கம் வழங்க முடியும்.
எங்களின் சேவைகளை தேவைப்படுவோர் தயங்காமல் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
உங்களின் சிறிய உதவியும் ஒரு நோயாளியின் வாழ்க்கையில் பெரிய நிம்மதியை அளிக்க முடியும் என பிரேமலா பொன்னுசாமி கூறுகிறார்.



வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் உள்ளவர்களை அரவணைப்போம்
புற்று நோய் போன்ற கொடூர நோயினால் அவதியுறும் நோயாளிகளுக்கு நாம் ஆதரவளிக்க வேண்டும் என PCAJB இயக்கத்தின் துணைத் தலைவர்
இளங்கோ முத்துசாமி கூறினார்.
உயிர் விலை மதிக்க முடியாதது. இதனை பிரியும் இறுதிக்கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு அன்பும் ஆதரவும் மிக அவசியமாகும்.
புற்று நோயின் இறுதிக்கட்டத்தில் உள்ள நோயாளிகள் வலி மற்றும் மன அழுத்தம் போன்றவற்றினால் மிகத் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
இவர்களை நேரில் சென்று கண்டு நோய்த் தடுப்பு சிகிச்சைகளை இந்த சங்கம் வழங்கி வருகிறது.
இந்த சங்கத்தின் செவிலியர்கள் சம்பந்தப்பட்ட நோயாளிகளை அன்பாக அணுகி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்த செவிலியர்கள் காட்டும் அன்பும் பரிவும் பல வேலளைகளில் இந்த நோயாளிகளுக்கு சற்று மன நிம்மதியை வழங்கி வருகிறது.
இது போன்ற மனிதநேய சேவைகளால் நோயாளிகள் மட்டுமல்ல அந்த நோயாளிகளின் குடும்பத்தினரும் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர் என்பது மறுக்க முடியாத ஒன்று.


இலவசமாக தன்னார்வ சேவைகளை வழங்கி வரும் இந்த சங்கத்திற்கு பொதுமக்களின் ஆதரவு மிக அவசியமாகும்.
நல் உள்ளங்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கி வரும் நன்கொடையே இந்த சங்கத்தை வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்கின்றது என அவர் சொன்னார்.
கடந்த 2007 ஆம் ஆண்டில் இந்த சங்கம் தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 நோயாளிகளுக்கு சங்கம் சிகிச்சை அளித்து வருகிறது என அவர் தெரிவித்தார்.
இந்த சங்கத்திற்கு வழங்கப்படும் ஒவ்வொரு நன்கொடைக்கும் வரி விலக்கு உண்டு என அவர் தெளிவுப்படுத்தினார்.
PCAJB பொறுப்பாளர்கள்:
தலைவர்
லிம் பாங் திவ் ஞானி
துணைத் தலைவர்
இளங்கோ
கௌரவ பொருளாளர்
ஜொ பவா ஷி செக்
கௌரவ செயலாளர்
லீவ் ஷூ பாங் எலெய்ன்
நிர்வாக உறுப்பினர்கள்
அங்கமுத்து ராஜு
நா வெய் ரென்
ரா. மணிமாறன்
டான் பூன் இவ்
ரியாலிரத்னா மஞ்சன்
நன்கொடை வழங்க விரும்பும் நல் உள்ளங்கள் கீழ்காணும் வங்கி எண்ணில் நன்கொடை வழங்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular