Friday, April 17, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கோலாலம்பூர்-பாத்தாம் தீவுக்கு ஏர் ஆசியா நேரடி விமான சேவை!

உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா கோலாலம்பூரிலிருந்து இந்தோனேசியாவின் பாத்தாம் தீவுக்கு நேரடி விமான சேவையை தொடங்குகிறது.
இது ஏர் ஆசியா இந்தோனேசியாவுக்கு மேற்கொள்ளும் 19 ஆவது வழிதடமாகும்.
கடந்த 2025 ஆம் ஆண்டில் மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கிடையே 30 லட்சம் பயணிகளை ஏர் ஆசியா கொண்டு சென்றுள்ளது.
இந்தோனேசியாவில் அதிகமான நகரங்களுக்கு சிறகடிக்கும் மலிவு கட்டண விமான நிறுவனம் ஏர் ஆசியா என்பது குறிப்பிடத்தக்கது.
கோலாலம்பூர்-பாத்தாம் தீவுக்கான தினசரி நேரடி விமான சேவை எதிர் வரும் 13 மார்ச் 2026-ல் ஏர் ஆசியா தொடங்குகிறது.
கடந்த 2025-ல் பாத்தாம் தீவுக்கு 120,000 அனைத்துலக பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இவர்களில் 23 % மலேசிய பயணிகளாகும்.
இந்த புதிய வழித்தடத்தின் மூலம் இன்னும் அதிகமான மலேசியர்கள் பாத்தாம் நகருக்கு வருகை புரிவார்கள் என ஏர் ஆசியா எதிர்பார்க்கிறது.


இதன் வழி மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கிடையே சுற்றுலா மற்றும் பொருளாதார துறைகள் வலுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வழித்தடம் 2026 மலேசியாவிற்கு வருகை புரியும் பிரச்சாரத்திற்கு ஆதரவை வழங்கும் என நம்பப்படுகிறது.
மலேசியாவிற்கு வருகை புரியும் பிரச்சாரத்திற்கு இந்தோனேசியாவிலிருந்து 46 லட்சம் சுற்றுப்பயணிகளை மலேசியா எதிர்பார்க்கிறது.
இதனிடையே இந்த புதிய வழித்தட விரிவாக்கம் மலேசியா மற்றும் இந்தோனேசிய பயணிகளுக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகளை தருவதாக ஏர் ஆசியா மலேசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்.
மேலும் இந்தோனேசியாவில் ஏர் ஆசியா தொடர்ந்து வலிமையாக கால் பதித்து வருவதை காட்டுவதாக அவர் சொன்னார்.
பாத்தாம் தீவுக்கு அதிகமாக பயணம் செய்யும் அனைத்துலக பயணிகளில் மலேசியா மற்றும் சிங்கப்பூர் முன்னணியில் இருந்து வருகின்றன.
இந்த புதிய வழித்தடம் இதர நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் பாத்தாம் தீவுக்கு செல்ல வாய்ப்பாக அமையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வர்த்தக மற்றும் சுற்றுப்பயணிகளுக்கு இந்த புதிய நேரடி விமான சேவை நல்லதொரு வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
ரியாவ் தீவுகள் மாகாணத்தில் உள்ள பாத்தாம் தீவு ஒரு அழகான மற்றும் அற்புதமான சுற்று தளமாகும்.
இந்த தீவு அனைத்துலக சுற்றுப்பயணிகளை அதிகம் கவர்ந்து வருகிறது.
குறிப்பாக மலேசியா மற்றும் சிங்கப்பூர் பயணிகளுக்கு இது ஒரு நுழைவாயில் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய நேரடி விமான சேவை தொடக்கத்தின் ஊக்குவிப்பு கட்டணமாக கோலாலம்பூர்-பாத்தாம் தீவுக்கு அனைத்தும் அடங்கிய ஒரு வழிப் பயண கட்டணம் வெ199-லிருந்து தொடங்குகிறது.
அதே வேளையில் பாத்தாம் தீவு- கோலாலம்பூர் அனைத்தும் அடங்கிய ஒருவழிப் பயண கட்டணம் IDR899,000 தொடங்குகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular