
எதிர் வரும் ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளிலும், பொதுத் தேர்தலில் ஜொகூரில் 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் எம்ஐபிபி போட்டியிடும் என அக்கட்சியின் தேசிய தலைவர் புனிதன் கூறினார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பங்காளி கட்சியான எம்ஐபிபி நாடு தழுவிய நிலையில் இந்திய சமூகத்தின் ஆதரவை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த நவ 16 ஆம் தேதி இங்கு தாமான் தம்போய் உத்தாமாவில் இந்திய சமூகத்திற்கு எம்ஐபிபி ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசினார்.
தற்போது எம்ஐபிபி கட்சியில் 50 ஆயிரம் உறுப்பினர்கள் இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

ஜொகூர் மாநிலத்தில் 26 தொகுதிகளை இக்கட்சி அமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
எம்ஐபிபி அமைக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது நாடு தழுவிய நிலையில் இக்கட்சி 100 தொகுதிகளை கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
எதிர் வரும் 16 பொதுத் தேர்தலை சந்திக்க கட்சி தயாராகி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் ஷாருடின், மாநில எம்ஐபிபி தலைவர் டாக்டர் ஷக்கின் மற்றும் கட்சியின் மாநில மகளிர் அணி தலைவி லீனா மனோ உட்பட பலர் கலந்து கொண்டனர்.


