Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

மேற்கு மலேசியாவில் புதிய நேரடி விமான சேவைகளை பாத்தேக் ஏர் தொடங்குகிறது!

மேற்கு மலேசியாவில் தனது விமான போக்குவரத்து தொடர்புகளை வலுப்படுத்தும் வகையில் கோத்தா கினபாலு மற்றும் கூச்சிங் நகர்களுக்கிடையே 2 புதிய நேரடி விமான சேவைகளை முன்னணி விமான நிறுவனமான பாத்தேக் ஏர் தொடங்குகிறது.
சபா மற்றும் சரவாக் மாநிலங்களில் விமான போக்குவரத்தில் தடையின்றி எளிதாக பயணிக்க பயணிகளின் தேவைகள் அதிகரிப்பை தொடர்ந்து இந்த புதிய விமான சேவைகள் தொடங்கப்படுகிறது.
இந்த புதிய நேரடி விமான சேவைகள் எதிர் வரும் 15 டிசம்பர் 2025-ல் தொடங்குகிறது.
2026 ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டிற்கான பிரச்சாரத்தை மெருகூட்டும் வகையில் இந்த புதிய நேரடி விமான சேவைகள் அமைகிறது.
மேலும் இந்த நேரடி விமான சேவைகளின் மூலம் உள்நாட்டு சுற்றுலாத்துறை, வர்த்தக பயனும் மற்றும் போர்னியோவில் உள்ள நகரங்களுக்கிடையிலான பயண தொடர்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நேரடி விமான சேவையின் அறிமுகம், கோத்தா கினபாலு வட போர்னியோவின் முக்கிய விமான போக்குவரத்து மையம் என்பதை பிரதிபலிக்கிறது.
அதே வேளையில் சாண்டகான் சபாவின் இயற்கை, பாரம்பரியம் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கான முக்கிய நுழைவாயல் மையம் என்பதை சித்தரிக்கிறது.
கோத்தா கினபாலு மற்றும் கூச்சிங் நகரங்களுக்கிடையிலான வாரத்திற்கு 7 முறை

நேரடி விமான சேவை இவ்விரு நகரங்களுக்கிடையே சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கோத்தா கினபாலு மற்றும் சாண்டகான் இடையிலான வாரத்திற்கு 7 முறை நேரடி விமான சேவை சாண்டகானில் உள்ள வனவிலங்கு சரணாலயங்கள், அங்குள்ள ரம்யமிக்க அமைதியான தீவுகள் சுற்றுப்பயணிகளை அதிகம் கவரும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த புதிய நேரடி விமான சேவையை கொண்டாடும் வகையில் சபா மற்றும் சரவாக் நகரங்களுக்கிடையே பயணிக்க ஒரு வழி பயண கட்டணமாக வெ 69 ஊக்குவிப்பு கட்டணம் வழங்கப்படுகிறது. இந்த ஊக்குவிப்பு கட்டணத்திற்கான பதிவு 30 நவம்பர் 2025 வரை. இதற்கான பயண காலம் 30 ஜனவரி 2026 வரை.
இதனிடையே இந்த புதிய நேரடி விமான தேவைகளை அறிமுகப்படுத்துவதில் தாங்கள் மகிழ்ச்சி அடைவதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
சபா மற்றும் சரவாக் விமான போக்குவரத்து தேவைகளை ஆதரிக்கும் வகையில் இந்த புதிய நேரடி விமான சேவைகளை பாத்தேக் ஏர் தொடங்குகிறது என்றார் அவர்.
கிழக்கு மலேசியாவில் நீண்ட கால பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா மேம்பாட்டை ஆதரிக்கும் வகையில் பாத்தேக் ஏர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


இதனிடையே தனது வியூகத் திட்டத்தை முன்னோக்கி பார்க்கும் வகையில் கோத்தா கினபாலு மற்றும் சிங்கப்பூருக்கு இடையே எதிர் வரும் 12 பிப்ரவரி 2026 முதல் நேரடி விமான சேவையை தமது நிறுவனம் தொடங்க இருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் கோத்தா கினபாலு மற்றும் தென் கொரியாவின் தலைநகரான சியோல் இடையே வாரத்திற்கு 3 நேரடி விமான சேவைகளை மேற்கொள்ள தமது நிறுவனம் திட்டம் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தனது பயணிகளின் தேவைகளை பூர்த்தி செய்ய வகையில் புதிய நகரங்களுக்கு பயணிக்க தாங்கள் திட்டம் கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
தனது பயணிகளுக்கு தடையற்ற மற்றும் சொகுசான பயண சேவைகளை வழங்குவதே தங்களின் பிரதான நோக்கம் என அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular