Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கட்டழகான மாடல் விருதை பெற்றார் கிருஷ்ணவேணி!

அண்மையில் இங்கு நடந்த மாடல் அழகிகளுக்கான விருது போட்டி ஒன்றில் கட்டழகான மாடல் அழகி விருதை ஜொகூர் பாருவை சேர்ந்த மாடல் அழகி கிருஷ்ண வேணி விஜயகுமார் தட்டி சென்றார்.
டாக்டர் கீதா தலைமையிலான கோல்ட் செம்பியன் மேனெஜ்மன்ட் நிறுவனம் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி தி டோம் கிளாங்கில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
மலேசியா, சிங்கப்பூர் மற்றும் அண்டை நாடுகளை உள்ளடக்கிய சுமார் 40 மாடல் அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மற்றொரு அங்கமான ஆண்களுக்கான மாடல் போட்டியும் இடம்பெற்றது.


இந்த போட்டியில் ஜொகூர் பாருவை சேர்ந்த மாடல் அழகி கிருஷ்ணவேணி தமது மாடல் திறனை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்தார்.
இந்தப் போட்டியின் இறுதியில் சிறந்த கட்டழகான மாடல் அழகி உறுதி கிருஷ்ணவேணி தட்டி சென்றார்.
இதனிடையே கடந்த சில ஆண்டுகளாக மாடல் துறை தொடர்பான போட்டிகளில் தாம் பங்கு பெற்ற போதிலும், இந்த போட்டி தமக்கு ஒரு புத்துணர்ச்சியை தருவதாக கிருஷ்ணவேணி கூறினார்.
மாடல் துறை என்பது பெண்கள் பங்கு பெற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு வழித் தடம் ஆகும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த வழித் தடத்தில் குறிப்பாக நமது இந்திய பெண்மணிகள் தங்களின் ஆற்றல்களை வெளிப்படுத்தலாம் என அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த விருது வழங்கும் கொண்டாட்டத்தில் தங்களை கௌரவப்படுத்திய கோல்ட் செம்பியன் மேனெஜ்மன்ட் நிறுவனத்தின் உரிமையாளர் டாக்டர் கீதாவிற்கு இவ்வேளையில் தாம் நன்றியை கூறிக் கொள்வதாக கிருஷ்ணவேணி குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular