
நாட்டில் பல்லின மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் மிரட்டல்கள் குறித்து பொதுமக்கள் புகார் செய்யலாம் என தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
தேசிய பொது சமூக புகார் மையம் வழி இந்த மிரட்டல்கள் குறித்து பொதுமக்கள் புகார் செய்யலாம் என்றார் அவர்.
இன்று மின்னல் எப்எம்மில் வழங்கிய நேர்காணல் ஒன்றில் இது குறித்து அவர் விளக்கம் தந்தார்.
தேசிய ஒற்றுமைத்துறை அமைச்சின் முயற்சியில் ஏற்படுத்தப்பட்ட e-Sepakat மற்றும் RAKAN வழி செய்யப்படும் ஒவ்வொரு புகாரும் விரிவாக பரிசிலிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இனங்களுக்கிடையே அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பாதிக்கும் மிரட்டல்கள் குறைத்து கடுமையாக கருதுவதாக அவர் சொன்னார்.
ஒற்றுமைக்கு மிரட்டலாக இருக்கும் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக புகார் செய்யலாம்
இன மற்றும் சமயப் பதற்றம் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக புகார் செய்யலாம்.
நல்லிணக்கத்தை பாதிக்கும் சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் உடனடியாக புகார் செய்ய வேண்டும்.
மக்களின் ஒற்றுமையை பாதிக்கும் இது போன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் தமது அமைச்சு
ஏற்படுத்தி தந்துள்ள e-Sepakat மற்றும் RAKAN வழி உடனடியாக புகார் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
ஒவ்வொரு புகாரையும் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.


