Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஆசியா மற்றும் ஐரோப்பா கண்டங்களை இணைக்க ஏர் ஆசியா எக்ஸ் கோலாலம்பூர்-இஸ்தான்புல் நேரடி விமான சேவை!

மலிவு விலை கட்டணத்தில் ஆசியான் மற்றும் ஐரோஆசியாவை நினைக்க ஏர் ஆசியா எக்ஸ் கோலாலம்பூர்-இஸ்தான்புல் நகரங்களுக்கிடையே நேரடி விமான சேவையை தொடங்கியது.
கடந்த 14 நவம்பர் 2025 காலை 9.35 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முனையம் 2-லிருந்து புறப்பட்ட D7 604 விமானம் அன்றைய தினம் உள்ளூர் நேரத்தின்படி மாலை 4.05 மணிக்கு துருக்கியின் சபிஹா கொக்சன் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்தது.
மலேசியா மற்றும் உலகில் பொருளாதாரம் மற்றும் பாரம்பரிய அம்சங்கள் கொண்ட ஒரு அழகிய நகரான இஸ்தான்புல் நகரை இணைப்பதில் ஏர் ஆசியா எக்ஸ் வெற்றி கண்டுள்ளது.
ஆசியாவிற்கு அப்பாற்பட்டு மலிவான கட்டணத்தில் துருக்கிக்கு ஏர் ஆசியா எக்ஸ் மேற்கொள்ளும் முதல் விமான சேவை இதுவாகும்.
அனைத்து நிலையில் உள்ள மக்கள் மலிவான கட்டணத்தில் ஒரு நீண்ட தூர விமான பயணத்தை மேற்கொண்டு மேற்கொள்ள இது ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
இதனிடையே இஸ்தான்புல் நகருக்கான இந்த நேரடி விமான சேவை ஏர் ஆசியா நீண்ட நாள் திட்டமிட்ட ஒரு துணிச்சல் மிக்க நடவடிக்கை என கேப்பிட்டல் ஏ தலைமை நிர்வாக தலைவர் டத்தோ கமாருடின் மெரானுன் கூறினார்.
வர்த்தகத்திற்கும் மற்றும் இதர நடவடிக்கைகளுக்கும் துருக்கி ஒரு அற்புதமான நகரம் என்றார் அவர்.

இந்த புதிய வழித் தடத்தின் மூலம் தென் ஆசியா மற்றும் ஐரோ ஆசியாவை எளிதில் இணைக்க முடியும் என அவர் சுட்டிக் காட்டினார்.
மலிவு விலை கட்டணத்தில் நீண்ட தூரத்தை இணைக்க இந்த புதிய வழித்தடத்தின் மூலம் ஏர் ஆசியா எக்ஸ் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நகரங்களுக்கான பயணிகளின் சேவை அதிகரித்து வருவதால், ஏர் ஆசியா எக்ஸ்ஸின் இந்த புதிய விமான சேவை பொருத்தமான நேரத்தில் அமைந்துள்ளதாக அவர் சொன்னார்.
இதனிடையே வரலாறு, கலாச்சாரம் மற்றும் வர்த்தக வளங்களை கொண்ட ஒரு அற்புதமான நகரம் இஸ்தான்புல் என ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ பென்யாமின் இஸ்மாயில் கூறினார்.
இந்த நேரடி சேவை ஒரு வழித்தடம் மட்டுமின்றி தென் ஆசியா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் ஒரு முக்கிய முன்னெடுப்பு என்றார் அவர்.
கடந்தாண்டில் மட்டும் 62 மில்லியன் அனைத்துலக சுற்றுப்பயணிகள் துருக்கிக்கு வருகை பரிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த புதிய வழிதடத்தின் மூலம் ஆசியான் மற்றும் மலேசியாவைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள் மலிவான கட்டணத்தில் ஆசியா மற்றும் ஐரோப்பா நகர்களுக்கு சிறகடிக்க முடியும் என அவர் சொன்னார்.
தற்போது ஏர் ஆசியா எக்ஸ் 20 அனைத்துலக நகரங்களுக்கு சிறகடித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
Fly-Thru ஏர் ஆசியா சேவையின் வழி பயணிகள் 130 நகரங்களுக்கு சிறகடிக்க முடியும் என அவர் சுட்டிக் காட்டினார்.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரத்திற்கு பொருத்தமான நேரத்தில் இந்த புதிய விமான சேவை அமைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே ஆசியா மற்றும் ஐரோப்பா ஆகிய இரண்டு கண்டங்களை நினைப்பதில் ஏர் ஆசியா எக்ஸ் வெற்றி கண்டுள்ளதாக மலேசியாவிற்கான துருக்கி நாட்டின் தூதர் எமிர் சாலிம் யுக்செல் கூறினார்.
இந்த புதிய விமான சேவையின் மூலம் துருக்கி மற்றும் மலேசியாவிற்கிடையே சுற்றுலா மற்றும் வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


இந்த புதிய விமான சேவை வழி மலேசியா மற்றும் ஆசியா நாடுகளை சேர்ந்த அதிகமான சுற்று பயணிகள் துருக்கிற்கு வருகை புரியும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
உலகளாவிய சுற்றுப்பயணிகளை துருக்கி அதிகமாக கவர்ந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இஸ்தான்புல் கோன்ராட் ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கேபிட்டல் ஏ நிர்வாக தலைவர் டத்தோ கமாருடின் மெரானுன், ஏர் ஆசியா எக்ஸ் தலைவர் டத்தோ ஃபாம் லீ, ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ பென்யாமின் இஸ்மாயில்,சாபிஹா கொச்சென் அனைத்துலக விமான நிலையத்தின் ஹாசான் ஹம்டான் இஸ்தான்புலில் உள்ள மலேசிய தூதரக அதிகாரி அமாட் அமிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular