Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பாத்தேக் ஏரின் கோலாலம்பூர்-பெர்த் நகரங்களுக்கிடையிலான சேவையின் 10 ஆம் ஆண்டு நிறைவு!

பாத்தேக் ஏரின் கோலாலம்பூர்-பெர்த் நகரங்களுக்கிடையிலான சேவையின் 10 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தை அந்த விமான நிறுவனம் வெகு சிறப்பாக கொண்டாடியது.
மலேசியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகியவற்றிற்கிடையே இருந்து வரும் அணுக்கமான தொடர்பை இந்த கொண்டாட்டம் பிரதிபலிக்க செய்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு கோலாலம்பூர்-பெர்த் நகரங்களுக்கிடையே தொடங்கப்பட்ட இந்த நேரடி விமான சேவை, பாத்தேக் ஏரின் அனைத்துலக வழித் தடத்தில் இது ஒரு முக்கிய வழித் தடமாக கருதப்படுகிறது.
இந்த சேவையின் இருவழி பயணத்திலும் சுற்றுப்பயணிகள், வர்த்தக பயணிகள் மற்றும் மாணவர்களுக்கு தடையின்றி சுமுகமான பயண சேவையை பாத்தேக் ஏர் வழங்கி வருகிறது.


இப்ராந்தியத்தில் தனது விரிவாக்கத்தில் அனைத்துலக பயணிகளுக்கு தடையற்ற சுமுகமான பயண சேவைகளை பாத்தேக் ஏர் வழங்கி வருவதை இந்த நிறைவு கொண்டாட்டம் பிரதிபலிக்கிறது.
இந்த மைல்கல் கொண்டாட்டத்தை நினைவு கூறும் வகையில் பெர்த் அனைத்துலக விமான நிலையத்தில், ஒரு நாள் முழுவதும் சிறப்பு கொண்டாட்ட நடவடிக்கைகளை பாத்தேக் ஏர் மேற்கொண்டது.
பெர்த் நகரிலிருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்ட பயணிகளுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
இதனிடையே பெர்த் நகரின் வழி மேற்கு ஆஸ்திரேலியாவை இணைப்பதில் பாத்தேக் ஏர் சாதனையை படைத்துள்ளதாக பெர்த் விமான நிலையத்தின் விமான போக்குவரத்து தலைமை அதிகாரி ஜேம்ஸ் கோர்டன் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளாக பெர்த் அனைத்துலக விமான நிலையம் மற்றும் பாத்தேக் ஏர் வலிமையான பங்காளித்துவ உறவுகளை வளர்த்து வருவதாக அவர் பெருமிதம் கொண்டார்.
மலேசிய சுற்றுப்பயணிகளின் அனைத்துலக சுற்றுப்பயண மையங்களில் பெர்த் ஐந்தாவது நிலையில் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பாத்தேக் ஏரின் இந்த பங்காளித்துவ உறவு வரும் காலங்களில் மேலும் வலுவடைய வேண்டும் என்பதோடு, பாத்தேக் ஏரின் பரஸ்பர உறவை தாங்கள் வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே கோலாலம்பூர்-பெர்த் நகரங்களுக்கிடையிலான விமான சேவை 10 ஆண்டுகள் கால் பதித்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று என பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.


இப்ராந்தியத்தில் பாத்தேக் ஏர் தொடர்ந்து வலிமையாக கால் பதித்து வரும் என்பதை இந்த கொண்டாட்டம் பிரதிபலிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தனது அனைத்துலக பயணிகளுக்கு தரமான மற்றும் தடையற்ற பயண சேவைகளை தமது விமான நிறுவனம் வழங்கிவரும் என அவர் உறுதி அளித்தார்.
இந்த 10 ஆண்டுகால பயண சேவை பாத்தேக் ஏரின் பெருமைக்குரிய ஒரு சாதனை என்றார் அவர்.
தனது அனைத்துலக பயணிகளுக்கு தரமான மற்றும் சொகுசான பயண சேவைகளை தொடர்ந்து வழங்கி வருவதில் தமது விமான நிறுவனம் கவனம் செலுத்தி வரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


தற்போது கோலாலம்பூர் மற்றும் பெர்த் நகர்களுக்கிடையே வாரத்திற்கு 7 நேரடி விமான சேவைகளை பாத்தேக் ஏர் மேற்கொண்டு வருகிறது. அதேவேளையில் டென்பாஸாரில்
(பாலி) ஒரு நிறுத்தமாக வாரத்திற்கு 7 விமான சேவைகளை பாத்தேக் ஏர் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
பயணிகளின் தேவை அதிகரித்து வருவதால் எதிர் வரும் டிசம்பரில் கோலாலம்பூர்-பெர்த் நகரங்களுக்கிடையே வாரத்திற்கு 11 நேரடி விமான சேவைகளை மேற்கொள்ள பாத்தேக் ஏர் திட்டம் கொண்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இதன் மூலம் மலேசியா மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையே வர்த்தகம், சுற்றுலா மற்றும் பொருளாதார வாய்ப்புகள் துரித வளர்ச்சி காணும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular