
இங்குள்ள சன் பேங் சாலை தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய ஒற்றுமைத்துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி தலைக் கவசங்களை வழங்கினார்.
தங்கள் பெற்றோருடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த தலைக் கவசங்கள் வழங்கப்படுவதாக செனட்டர் சரஸ்வதி கூறினார்.
தங்களுடன் மோட்டார் சைக்கிள் பயணிக்கும் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இதுபோன்று காலங்களில் தங்கள் பிள்ளைகள் தலைக் கவசங்கள் அணிந்திருப்பதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றார் அவர்.

சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மாணவர்கள் கடைபிடிப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
மாணவர்களிடையே பாதுகாப்பு கலாச்சாரத்தை வளர்க்க ஆசிரியர்கள் முக்கிய பங்காற்ற வேண்டும் என தமதுரையில் அவர் குறிப்பிட்டார்.
மாணவர்களின் பாதுகாப்பு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது என அவர் நினைவுறுத்தினார்.


