
மலிவு கட்டண பயணத்தை உலகளவில் கொண்டு செல்ல AAX மற்றும் Capital A பெர்ஹாட் இடையிலான பங்கு விற்பனை மற்றும் கொள்முதல் ஒப்பந்தத்தின்
(“SSPAs”) நடவடிக்கையில் ஏர் ஆசியா எக்ஸ் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
இதன்படி கடந்த 29 அக்டோபர் 2025-ல் அவற்றின் விதிமுறைகள் மற்றும் நிபந்தன்களுக்கு ஏற்ப SSPAs நிபந்தனையற்றதாக மாறியுள்ளன.
இந்த மேம்பாடு AirAsia Aviation Group Limited(“AAAGL”) மற்றும் AirAsia Berhad
(“AAB”) ஆகியவற்றின் முன்மொழிக்கப்பட்ட கையகப்படுத்தல்களில் ஒரு முக்கிய மைல்கலைக் குளிக்கிறது. மேலும் இது Air Asia எக்ஸின் கீழ் ஒருங்கிணைந்த விமான தளத்தின் அடித்தளத்தை கூட்டாக உருவாக்கிறது. இது Air Asia Group என்று அழைக்கப்படும்.
Air Asia Group ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் நடுத்தர மற்றும் குறுகிய தூர வழித்தடங்களுக்கு விமான சேவைகளை மேற்கொள்ளும்.
இந்த மைல்கல் அனைத்து நிலுவையில் உள்ள தேவைகளையும் பூர்த்தி செய்வதை தொடர்ந்து வருகிறது.Air Asia எக்ஸ்கான அனைத்து பங்குதாரர்களின் ஒப்புதல் கடிதங்களும் வெ 1 பில்லியன் தனியார் வேலைவாய்ப்பு உறுதிமொழி கடிதங்களும் பெறப்பட்டுள்ளன. மேலும் கடந்த 17 அக்டோபர் அன்று தாய்லாந்திலிருந்து தேவைப்படும் ஒழுங்குமுறை விலக்கு தொடர்பான ஒரு பெரிய தடை தீர்க்கப்பட்டது
இதனிடையே இந்த நடவடிக்கை ஒரு குறிப்பிட்ட தக்க முன்னேற்ற படியாகும் என Air Asia எக்ஸ் பெர்ஹாட் தலைவர் டத்தோ’ ஃபாம் லீ யீ கூறினார்.
இது Air Asia அதன் அடுத்த அத்தியாயத்தில் பரிணமிப்பதை குறிப்பதாக அவர் சொன்னார்.
Air Asia மற்றும் Air Asia எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஆசியாவில் குறைந்த விலை பயணத்திற்கு முன்னோடியாக இருந்து வந்தன என்றார் அவர்.
மேலும் Air Asia குழுமத்தை உருவாக்குவதன் மூலம், உலகின் முதல் மலிவு கட்டண நெட்வொர்க் கேரியராக அந்த மரபை தாங்கள் உருவாக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த பரிவர்த்தனை இப்போது நிபந்தனை அற்றதாக வருவதால் ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட முக்கிய பிராந்தியங்களில் விரிவான விமான சேவையை மேற்கொள்ளப் போவதாக அவர் சொன்னார்.
எதிர்காலத்தில் மத்திய கிழக்கு ரஷ்யா மற்றும் ஐரோப்பாவிற்கு விரிவடையவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


