
இந்நாட்டில் உள்ள இந்திய தொழில் முனைவர்களுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு வழங்கி வருவதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
மடானி அரசாங்கம் வழங்கி வரும் வாய்ப்புகளை நமது இந்திய தொழில் முனைவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இன்று இங்கு நடந்த மலேசியா-தமிழ்நாடு வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு அவர் பேசினார்.
மலேசியா மற்றும் தமிழ்நாடு ஆகியவற்றிற்கிடையே கிடைக்கப்படும் வர்த்தக வாய்ப்புகளை இரு தரப்பு வர்த்தகர்களும் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இவர்கள் தங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்த இது மிக அவசியம் என அவர் சொன்னார்.
இந்த மாநாட்டை மலேசியா நகரத்தார் வர்த்தக சம்மேளனம் மற்றும் கோலாலம்பூர் & சிலாங்கூர் வர்த்தக சங்கம் ஏற்பாடு செய்தது.


