Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

வர்த்தக பயண அனுபவத்தை மேம்படுத்த பாத்திக் ஏர் மற்றும் இஆர்எல் கூட்டு முயற்சி!

வர்த்தகப் பயணிகளுக்கு(பிஸ்னஸ் கிளாஸ்) மேற்ப்பட்ட வசதி மற்றும் பிரத்தியோக நன்மைகளை வழங்க பாத்தேக் ஏர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் லிங்க் எஸ்டிஎன்.பெர்ஹாட்
(இஆர்எல்) கூட்டு சேர்ந்துள்ளது.
பிஸ்னஸ் கிளாஸ் பயணிகளுக்கு சிறப்புக் கட்டணங்களை வழங்க இஆர்எல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ள முதல் விமான நிறுவனம் பாத்தேக் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் KLIA Ekspres பயணிகள் Batik Air Business Class Flexi டிக்கெட்டுகளை வாங்கும் போது 25 % வரை தள்ளுபடி அனுபவிக்க முடியும்.
இது KL சென்ட்ரல் மற்றும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம்(கேஎல்ஐஏ)
இடையியே நம்பகமான பயணத்தை வழங்கும் இஆர்எல் வழியாக அதிக மதிப்பும் மற்றும் தடையற்ற இணைப்பை வழங்குகிறது.
மலேசியாவின் வேகமான விமான நிலைய பரிமாற்றுமான KLIA Ekspres,KL சென்ட்ரலை KLIA உடன் வரும் 28 நிமிடங்களில் இணைக்கிறது.
இதனால் பிஸ்னஸ் கிளாஸ் பயணிகள் தங்கள் பயணத்தின் போது உற்பத்தி திறனை அதிகரிக்க அனுமதிக்கிறது.
பாத்தேக் ஏர் பிஸ்னஸ் கிளாஸ் Flexi முன்னுரிமை செக்-இன், தாராளமான சாமான்கள் கொடுப்பனவு, நெகிழ்வான மறுமுன்பதிவு மற்றும் பிரத்யோக ஓய்வறைகளுக்கான அணுகல் ஆகியவற்றுடன் அனுபவத்தை மேலும் மேம்படுத்துகிறது.
கூடுதல் வசதிக்காக பாத்தேக் ஏர் பயணிகள் KL சென்ட்ரலில் நேரடியாக தங்கள் விமானங்களுக்கு செக்-இன் செய்யலாம். இந்த நகரத்திற்குள் செக்- இன் சேவை,KLIA Express இல் ஏறுவதற்கு முன்பு பயணிகள் சாமான்களை இறக்கிவிட்டு போர்டிங் பாஸ்களை பெற அனுமதிக்கிறது. இது நகரத்திலிருந்து விமான நிலையத்திற்கு பயணத்தை இன்னும் மென்மையாகவும் திறமையாகவும் ஆக்குகிறது.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் பிரச்சாரத்துக்கு மலேசியா தயாராகி வருவதால் தடையற்ற பயண விருப்பங்கள் பெருகிய முறையில் முக்கியமானவை.
பாத்தேக் ஏர் மற்றும் இஆர்எல் இடையிலான இதுபோன்ற ஒத்துழைப்பு வணிகம் மற்றும் சுற்றுலா பயணிகளை ஆதரிக்கின்றனர்.
நேரத்தை மிச்சப்படுத்தவும் மற்றும் வசதியை மேம்படுத்தும் நகர்த்தில் இருந்து விமான நிலையத்திற்கு ஒரு மென்மையான பயணத்தை வழங்குகிறது.
இந்த சேவைகளை இணைப்பதன் மூலம் வர்த்தக பயணிகள் தங்கள் பயணம் முழுவதும் நிலையான வசதி நம்பகத்தன்மை மற்றும் பிரீமியம் சேவையை அனுபவிக்க முடியும்.
இந்த ஒத்துழைப்பு மலேசியாவில் தடையற்ற வர்த்தக பயணத்திற்கான ஒரு புதிய தரத்தை அனுமதிக்கும் பாத்தேக் ஏரின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
மேலும் தகவல்களுக்கு மற்றும் உங்கள் அடுத்த பயணத்தை திட்டமிட, பாத்தேக் ஏர் மொபைல் செயலியை பதிவிறக்கம் அல்லது www.batikair.com பார்வையிடலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular