Monday, April 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

பள்ளி மாணவர்களுக்கிடையே சாலை பாதுகாப்பு மீதான விழிப்புணர்வு மிகவும் அவசியம்!

பள்ளி மாணவர்களுக்கிடையே சாலை பாதுகாப்பு மீதான விழிப்புணர்வு மிகவும் அவசியம் என தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி வலியுறுத்தினார்.
நேற்று இங்கு பங்சார் தமிழ் பள்ளியில் மாணவர்களுக்கு தலைக்கவசம் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
இந்த தலைக்கவசம் வழங்கும் திட்டம் குர்னியா காப்புறுதி நிறுவனத்தின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பங்சார் தமிழ் பள்ளியில் 22 மாணவர்களுக்கு தலை கவசம் அவர் வழங்கினார்.
இதுவரை நாடு முழுவதும் 1200 மாணவர்களுக்கு தலை கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
தமிழ் பள்ளி மாணவர்களுக்கிடையே பாதுகாப்பு அவசியம் குறித்து பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அவ்வப்போது வலியுறுத்தி வரவேண்டும் என அவர் குறிப்பிட்டார்.


சாலை பாதுகாப்பில் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலட்சியப் போக்கை கடைபிடிக்க கூடாது என அவர் நினைவுறுத்தினார்.
சாலை விபத்து விபரீதத்தை தரும் என்பதால் இந்த விவகாரத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
நமது இந்திய மாணவர்களின் நலன்களில் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular