
மாசாய் சமூக மேம்பாட்டு கழகத்தின் (மீவா) ஏற்பாட்டில், 68 ஆவது தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஒரு சிறப்பான நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கான வர்ணம் தீட்டும் போட்டி மற்றும் போட்டி விளையாட்டுக்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக மீவா தலைவர் டத்தோ டாக்டர் புருஷோத்தமன் கூறினார்.
இந்த நிகழ்ச்சியை அருண் டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் எஸ்ஏ அருண் அதிகாரப்பூர்வமாக துடைக்க வைத்ததாக அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்துடன் கலந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் லார்க்கின் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய தலைவர் தொண்டர் மணி டாக்டர் சுப்பிரமணியம்,மெர்டேக்கா கந்தப்பன் உட்பட பலர் கலந்து கொண்டதாக அவர் சொன்னார்.
தேசியக்கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட மெர்டேக்கா கந்தப்பனின் வாகனத்தை முன்னிறுத்தி இந்த கொண்டாட்டம் நடைபெற்றது என்றார் அவர்.
தேசிய தினத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மீவா இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
நாம் அனைவரும் நாட்டின் மீது விசுவாசத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


