Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜெராம் பாடாங் பெரிக்காத்தான் நேஷனல் 20 குடும்பங்களுக்கு பொருள் உதவி

ஜெராம் பாடாங் ஆக 16
ஜெராம் பாடாங் பெரிக்காத்தான் நேஷனல் குழுவினர் இந்த தொகுதியில் உள்ள வசதி குறைந்த 20 குடும்பங்களுக்கு பொருள் உதவிகளை வழங்கினர்.
ஸ்ரீ ரோம்பின்,லாடாங் புக்கிட் பிலா மற்றும் தாமான் மெலோர் பகுதிகளைச் சேர்ந்த இந்த வசதி குறைந்த குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பெட்டிகளை பெரிக்காத்தான் நேஷனல் குழுவினர் எடுத்து வழங்கினார்.
அரசாங்கத்திடமிருந்து நிதி ஒதுக்கீடு கிடைக்காத போதிலும் இந்த தொகுதி மக்களுக்கு பெரிக்காத்தான் நேஷனல் குழுவினர் தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகின்றனர்.


ஜெராம் பாடாங் சட்டமன்ற தொகுதியின் பெரிக்காத்தான் நேஷனல் ஒருங்கிணைப்பாளர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் தலைமையில் இந்த தொகுதி மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.


பெர்சாத்து கட்சியின் மலாய்காரர்கள் அல்லாதவர் பிரிவின் துணைத் தலைவரும் அக்கட்சியின் உச்ச மன்ற உறுப்பினருமான சஞ்சீவன், இந்த தொகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறார்.
தமது சொந்த நிதியை பயன்படுத்தி இந்த தொகுதியில் உள்ள வசதி குறைந்த மக்களுக்கு அவ்வப்போது தேவையான உதவிகளை அவர் செய்து வருகிறார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular