Thursday, April 16, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கோத்தா கினபாலுவிலிருந்து தைபே வழி ஃபுகுயோகா நகருக்கு ஏர் ஆசியா சிறகடிக்கிறது

செப்பாங் ஆக 16
கோத்தா கினபாலுவிலிருந்து தைபே வழி ஜப்பானின் ஃபுகுயோகா நகருக்கு ஏர் ஆசியா மலேசியா விமான சேவையை தொடங்கியது.
நேற்று ஆக 15 கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்திலிருந்து AK1510 விமானம் காலை 7.40 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3.15 மணிக்கு (உள்ளூர் நேரம்) ஃபுகுயோகா அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்தது.
தைபே-ஃபுகுயோகா வழி வந்தடைந்த பயணிகளை ஏர் ஆசியா மலேசியா தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா உற்சாகத்துடன் வரவேற்றார்.


இந்த புதிய வழித்தடம் கோத்தா கினபாலுவை ஒரு முக்கிய மையமாக மேம்படுத்த உதவும் என ஏர் ஆசியா மலேசியா கருதுகிறது.
இதனிடையே ஜப்பானுக்கு கோத்தா கினபாலுவிருந்து தெபே வழி ஏர் ஆசியா மலேசியாவின் இந்த முதல் விமான சேவை தங்களுக்கு மகிழ்ச்சி தருவதாக ஃபுகுயோகாவில் உள்ள தபே பொருளாதாரம் மற்றும் கலாச்சார அலுவலக தலைவர் புருஸ் சேன் கூறினார்.
மேலும் இந்த புதிய விமான சேவை தைவான் மற்றும் ஜப்பானுக்கு இடையே விமான போக்குவரத்தை எளிதி படுத்துவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியாவிற்கு இடையிலான உறவுகள் இந்த புதிய வழித்தடத்தின் மூலம் வலுபெறும் என்றார் அவர்.
அத்துடன் மூன்று நாடுகளுக்கு இடையே அனைத்துலக ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார துரித வளர்ச்சி காணும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


இதனிடையே தபேவிலிருந்து ஃபுகுயோகா நகருக்கான இந்த புதிய விமான சேவை நல்ல வரவேற்பை தரும் என தாம் நம்புவதாக ஏர் ஆசியா மலேசியா தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்.
மேலும் இந்த புதிய விமான சேவையின் வழி கிழக்கு மலேசியாவில் கோத்தா கினபாலு ஒரு முக்கிய மையமாக வளர்ச்சிக்கான துணை புரியும் என அவர் சொன்னார்.
அத்துடன் கோத்தா கினபாலு,தைபே மற்றும் ஃபுகுயோகா நகரங்களில் சுற்றுலாத்துறை துரித வளர்ச்சியை காணும் என அவர் சொன்னார்.
கோத்தா கினபாலுவிலிருந்து ஜப்பானுக்கு ஃபுகுயோகாவை முதல் நகரமாக ஏர் ஆசியா மலேசியா தேர்வு செய்துள்ளது தங்களுக்கு பெருமையை தருவதாக ஃபுகுயோகா அனைத்துலக விமான நிலையத்தின் தலைமை செயல்முறை ஷின்ஜி தாகாவா கூறினார்.
மேலும் அனைத்துலக விமானங்கள் இங்கு வந்தடைய ஃபுகுயோகா அனைத்துலக விமான நிலையத்தை மேலும் விரிவுபடுத்த திட்டங்களை தாங்கள் மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த புதிய விமான சேவையால் ஃபுகுயோகா நகரின் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சி காணும் என நம்பிக்கை தெரிவித்தார்.
இதனிடையே இந்த புதிய விமான சேவையின் மூலம் ஜப்பான் மற்றும் மலேசியாவிற்கிடையே நல்லுறவு மேலும் வலுப்படும் என ஜப்பானில் உள்ள மலேசிய சுற்றுலாத்துறை இயக்குனர் ஷாலிஸா அஜிஸ் கூறினார்.
அத்துடன் இரு நாடுகளின் சுற்றுலாத்துறை மேலும் வளர்ச்சி காணும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular